பதிவு செய்த நாள்
30
ஜூன்
2015
06:06
பேரரசர் ஒருவர், பாக்தாத் மன்னரான கலீபா அருண்அல் ரஷீத்துக்கு ஒரு கடிதம் கொடுத்தனுப்பினார். இனிமேல் பாக்தாத்திற்கு கப்பம் கட்டமாட்டோம். மேலும், இதுவரை கட்டிய கப்ப பணத்தையும் திருப்பித் தந்து விட வேண்டும். இதைச் செய்யத் தவறினால் போரைத் தவிர்க்க முடியாது, என அதில் எச்சரிக்கை செய்திருந்தார்.கலீபாவுக்கு கடும் கோபம். தனது பதில் கடிதத்தில், நாங்கள் எழுத ஏதுமில்லை. முடிந்தால் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள், என்று எழுதி அனுப்பிவிட்டார். கடும் போர் நடந்தது. கலீபா வெற்றி பெற்றார். தோற்ற பேரரசர், கலீபா! எங்களை மன்னிக்க வேண்டும். இதற்கு முன்பு கட்டிய கப்பத்தை விட அதிகமாகத் தருகிறோம், எங்களை விட்டுவிடுங்கள், என கெஞ்சினார்.சரி...அப்படியானால், உங்கள் நாட்டிலுள்ள அறிவியல் நுõல்களை எங்களுக்கு கப்பமாகத் தர வேண்டும், என்றார்.அதன்படி பேரரசர் தங்கள் நாட்டிலுள்ள அறிவியல் நுõல்களைக் கப்பமாகக் கொடுத்தார். அதை அரபு மொழியில் மொழிபெயர்த்த கலீபா, தங்கள் தேசமும் அறிவியல் ரீதியான முன்னேற்றம் பெற முயற்சியெடுத்தார்.கல்விக்கு அழிவே இல்லை. அதுபோல், அதற்காக கொடுக்கும் பொருளுக்கும் அழிவில்லை, என்கிறார் நபிகள் நாயகம்.கல்விக்கு இணை கல்வி தான்! மாணவர்களே! கல்வியாண்டின் துவக்கமான இப்போதே நன்றாகப் படிக்கத் துவங்கினால் நீங்களும் நல்ல மார்க் பெறுவீர்கள்.