பதிவு செய்த நாள்
01
ஜூலை
2015
11:07
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உண்டியலில், பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை, ரூ.40 லட்சத்தை தொட்டது. ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு, வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து, திரளான பக்தர்கள் தினமும் வருகின்றனர். கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 16 நிரந்தர உண்டியல்களிலும், 6 தட்டு காணிக்கை உண்டியல்களிலும், பக்தர்கள், காணிக்கையை செலுத்துகின்றனர். மாதம் ஒருமுறை உண்டியல்கள் திறந்து எண்ணப்படுவது வழக்கம். நேற்று முன்தினம் காலை, கோவில் உதவி ஆணையர் கார்த்திக், இந்து சமய அறநிலையத்துறையின் கோவை மாவட்ட உதவி ஆணையர் ஜீவானந்தம், பொள்ளாச்சி ஆய்வாளர் புவனேஸ்வரி முன்னிலையில், காணிக்கை எண்ணும் பணி நடந்தது. நிரந்தர உண்டியல்களில், 29 லட்சத்து 2,613 ரூபாய், தட்டுகாணிக்கை உண்டியல்களில், 11 லட்சத்து 38 ஆயிரத்து 325 ரூபாய் என, 40 லட்சத்து 40 ஆயிரத்து 938 ரூபாய் காணிக்கை இருந்தது. அம்மனுக்கு காணிக்கையாக 271 கிராம் தங்கம் மற்றும் 260 கிராம் வெள்ளியை பக்தர்கள் செலுத்தியிருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில், சலவநாயக்கனுாரை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஈடுப்பட்டனர்.