பதிவு செய்த நாள்
08
ஜூலை
2015
04:07
1 ஏவம் தேவ சதுர்தச ஆத்மக
ஜகத்ரூபணே: ஜாத; புன:
தஸ்ய ஊர்த்வம் கலு ஸத்ய லோகநிலயே
ஜாத: அஸி ததா ஸ்வயம்
யம் சம்ஸந்தி ஹிரண்யகர்ப்பம் அகில
த்ரைலோக்ய ஜீவாத்மகம்
ய: அபூத் ஸ்பீத ரஜோ விகார விகஸந்
நாநா ஸிஸ்ருக்ஷா ரஸ:
பொருள்: தேவனே! குருவாயூரப்பனே! இப்படியாக பதினான்கு லோகங்களின் வடிவமாகவே தோன்றிய நீ அவற்றின் மேலே உள்ள ஸத்யலோகம் என்பதில் ப்ரும்மாவாகத் தோன்றினாய். பூமி, சுவர்க்கம், பாதாளம் என்னும் மூன்று உலகங்களிலும் ஜீவனின் ரூபமாகவே உள்ளவனை ஹிரண்ய கர்ப்பன் என்பர். அப்படிப்பட்ட ப்ரும்ம (நான்முகன்) தனது மாறுபாடுகள் அடைந்த ரஜோகுணம் காரணமாக பலவிதமான ஸ்ருஷ்டிகளைச் செய்வதில் ஆர்வம் கொண்டான்.
2. ஸோ அயம் விச்வ விஸர்க தத்த
ஹ்ருதய: ஸம்பச்ய மாந: ஸ்வயம்
போதம் கல்வனாப்ய விச்வ விஷயம்
சிந்தாகுல: தஸ்திவான்
தாவத் த்வம் ஜகதாம்பதே தப தப இதி
ஏவம் ஹி வைஹாயஸீம்
வாணீம் ஏனம் அசிச்ரவ: ச்ருதி ஸுகாம்
குர்வன் தப: ப்ரேரணாம்
பொருள்: குருவாயூரப்பனே! இப்படியாக ஸ்ருஷ்டி செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டு அதைப் பற்றி நன்றாக ஆராய்ந்து பார்த்தும், இந்த ஸ்ருஷ்டியைக் குறித்த தெளிவான ஒரு முடிவுக்கு நான்முகனால் வர இயலவில்லை. இதனால் மிகவும் மனக்கவலை கொண்டான். இந்த ஜகத்தின் நாதனே! அப்போது நீ அவனது காதுக்கு இனிமை அளிக்கும்படியாக தவம் புரிவாயாக என்று அசரீரி வாக்காகக் கூறினாய்.
3 கோ அஸௌ மாம் அவதத் புமான் இதி
ஜலாபூர்ணே ஜகன்மண்டலே
திக்ஷு உத்வீக்ஷ்ய கிமபி அனீக்ஷிதவதா
வாக்யார்த்தம் உத்பச்யதா
திவ்யம் வர்ஷ ஸஹஸ்ரம் ஆத்த தபஸா
தேன த்வம் ஆராதித:
தஸ்மை தர்ஸிதவானஸி ஸ்வநிலயம்
வைகுண்டம் ஏகாத்புதம்
பொருள்: குருவாயூரப்பனே! நீ அசரீரியாகக் கூறிய போது உலகம் முழுவதும் நீரினால் நிரம்பியிருந்தது. இப்படி இருந்தும் தன்னை நோக்கி இவ்விதமாகக் கூறிய புருஷன் யார் என்று நான்முகன் அனைத்துத் திசைகளிலும் நோக்கினான். யாரையும் பார்க்க இயலவில்லை. இருந்தாலும் தனக்குக் கேட்ட அந்த அசரீரி வாக்கின் உட்பொருளை உணர்ந்த நான்முகன் உன்னைக் குறித்து ஆயிரம் தேவ வருடம் தவம் இயற்றினான். அப்படிப்பட்ட நான்முகனுக்காக, காண்பதற்கே வியப்பாக இருக்கின்ற உன்னுடைய இருப்பிடமான ஸ்ரீ வைகுண்டத்தை அவனுக்குக் காண்பித்தாய் அல்லவா?
4. மாயா யத்ர கதாபி நோவி குருதே
பாதே ஜகத்ப்யோ பஹி:
சோக க்ரோத விமோஹ ஸாத்வ ஸமுகா
பாவாஸ்து தூரம் கதா:
ஸாந்த்ரானந்த ஜரீ ச யத்ர பரம
ஜ்யோதி: ப்ரகாசாத்மகே
தத் தே தாம விபாவிதம் விஜயதே
வைகுண்ட ரூபம் விபோ
பொருள்: எங்கும் விளங்கியுள்ள குருவாயூரப்பனே! அந்த லோகத்தில் மாயை என்பது இல்லை. அந்த லோகம் அனைத்து லோகங்களுக்கும். அப்பால் உள்ளது. அந்த லோகத்தில் துக்கம். கோபம், அஞ்ஞானம், பயம் ஆகியவை இல்லை. அந்த லோகம் மாறுபாடு அடையாமல் என்றும் ஒளி வீசிக்கொண்டு உள்ளது. அங்கு எப்போதும் ஆனந்தம் நிறைந்து உள்ளது. இப்படியான லோகம் வைகுண்டம் ஆகும். இதனை நீ ப்ரும்மாவுக்கு காண்பித்தாய்.
5. யஸ்மிந்நாம சதுர்புஜா ஹரிமணி
ச்யாமாவதாதத் விஷ:
நாதா பூஷண ரத்ன தீபித
திச: ராஜத் விமானாலயா:
பக்தி ப்ராப்த ததாவித உன்னத பதா:
தீவ்யந்தி திவ்யா: ஜனா:
தத் தே தாம நிரஸ்த ஸர்வசமலம்
வைகுண்ட ரூபம் ஜயேத்
பொருள்: குருவாயூரப்பனே! அந்த லோகத்தில் உள்ளவர்கள் நான்கு கரங்களை உடையவர்கள்; அவர்கள் இந்திரநீலம் போன்று உள்ளவர்கள்; கண்ணைக் கவர்கின்ற ஆபரணங்களையும், ரத்தினங்களையும் அணிந்து அதனால் அனைத்துத் திசைகளிலும் ஒளி வீசுபவர்கள்; ஒளி பொருந்திய விமானங்களில் (மாளிகை என்று கொள்ளலாம்) வசிப்பவர்கள்; அவர்கள் தெய்வீகமும் பக்தியும் பொருந்தியவர்கள் ஆவர். அவர்கள் தங்கள் பக்தியின் விளைவாக இப்படியாகப் ப்ரகாசமாக உள்ளனர். இப்படிப்பட்டவர்கள் உள்ள இடமும் பாவங்கள் நீங்கப்பட்ட இடமும் ஆகிய உனது வைகுண்டம் என்றும் சிறந்து விளங்க வேண்டும்.
6. நாநா திவ்ய வதூஜனை: அபிவ்ருதா
வித்யுல்லதா துல்யயா
விச்வோன் மாதன ஹ்ருத்ய காத்ரலதயா
வித்யோதிதா சாந்தரா
த்வத் பாதாம்புஜ ஸௌரபைக குதுகால்
லக்ஷ்மீ: ஸ்வயம் லக்ஷ்யதே
யஸ்மின் விஸ்மயநீய திவ்ய விபவா
தத்தே பதம் தேஹி மே
பொருள்: குருவாயூரப்பனே! அந்த லோகத்தில் மஹாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். அவள் எப்படி உள்ளாள்? தேவ பெண்கள் பலரும் அவளைச் சூழ்ந்து உள்ளனர். மின்னலைப் போன்று மெல்லியவளாக அனைத்து மக்களையும் கவர்ந்து இழுப்பவளாக உள்ளாள்; அனைத்து திசைகளையும் ஒளியுடையதாகச் செய்பவளாக உள்ளாள்; அதிசயிக்கத்தக்க திருமேனி கொண்டவளாக உள்ளாள்; உனது திருவடித் தாமரைகளின் வாசனையை எப்போதும் முகர்ந்து இருக்கக் விருப்பப்பட்டு உள்ளாள். இத்தகைய இடமான உனது வைகுண்ட பதவியை எனக்கும் தர வேண்டும்.
7. தத்ர ஏவம் ப்ரதி தர்சிதே நிஜபதே
ரத்னாஸனாத் ஆஸிதம்
பாஸ்வத் கோடி லஸத்க்ரீட கடகாத்
யாகல்பதீ ப்ராக்ருதி
ஸ்ரீவத்ஸாங்கிதம் ஆத்த கவுஸ்துபமணிச்
சாயாருணம் காரணம்
விச்வேஷாம் தவரூபம் ஜக்ஷத விதி:
தத் தே விபோ பாது மே
பொருள்: குருவாயூரப்பனே! இப்படியாக உனது வைகுண்டத்தை நீ ப்ரும்மாவுக்குக் காண்பித்தாய்! அங்கு உன்னை ப்ரம்மன் எப்படிக் கண்டான்? நீ ரத்னங்களால் அமைக்கப்பட்ட ஆசனத்தில் இருந்தாய். பலகோடி சூரியன்கள் ஒன்றாக இணைந்தால் உண்டாகும் ப்ரகாசம் அளவிற்கு ஒளிவீசும் க்ரீடம், தோள் வளையல்கள் போன்ற ஆபரணங்கள் அணிந்திருந்தாய்; ஸ்ரீவத்ஸம் என்ற மச்சமும் கவுஸ்துப மணியும் கொண்டிருந்தாய் - இப்படியான உனது திருமேனி எழிலைப் ப்ரும்மா கண்டான். ப்ரும்மா கண்டு ரசித்த அந்த ரூபமானது எனக்கும் தோன்ற வேண்டும்.
(குறிப்பு - இங்கு ஆசனத்தில் இருந்தாய். கொண்டிருந்தாய் போன்ற பதங்கள், வரிகளின் முழுமைக்காக எழுதப்பட்டனவே அன்றி அவை மூலத்தில் இல்லை).
8. காலாம் போத கலாய கோமலருசீ
சக்ரேண சக்ரம் திசாம்
ஆவ்ருணவானம் உதார மந்த ஹஸித
ஸ்யந்த ப்ரஸந்நானனம்
ராஜத் கம்புகதாரி பங்கஜதர ஸ்ரீமத்
புஜா மண்டலம்
ஸ்ரஷ்டு: துஷ்டிகரம் வபு: தவ விபோ
மத்ரோகம் உத்வாஸயேத்
பொருள்: எங்கும் நிறைந்தவனே! ஸ்ரீ அப்பனே! மழை நீர் உடைய கார் மேகத்தையும், காயாம் பூவையும் ஒத்த நிறமுடைய அழகான உனது திருமேனி அனைத்துத் திசைகளிலும் தனது ஒளியை வீசியபடி உள்ளது; உன்னுடைய கனிவான திருமுகத்தில் தவழ்கின்ற கம்பீரமும் அழகும் இணைந்த மந்தஹாசப் புன்னகை முகத்திற்கு மேலும் அழகு கூட்டுகிறது; உனது கைகளில் சங்கு, சக்கரம், கதை, தாமரை, ஆகியவை உள்ளன. இவற்றைக் கொண்டுள்ள புஜங்கள் அழகாக உள்ளன; இத்தகைய திருமேனி ப்ரும்மா மனம் மகிழும் வண்ணம் இருந்தது. இந்தத் தோற்றம் எனது வியாதிகளை நீக்க வேண்டும்.
9. த்ருஷ்ட்வா ஸம்ப்ருத ஸம்ப்ரம: கமலபூ;
த்வத் பாத பாதோருஹே
ஹர்ஷாவேச வசம்வத; நிபதித; ப்ரீத்யா
க்ருதார்த்தீ பவன்
ஜானாஸ்யேவ மனீஷிதம் மம விபோ
ஜ்ஞாநம் ததாபாதய
த்வைத் அத்வைத பவத் ஸ்வரூப பரம
இதி ஆசஷ்ட தம் த்வாம் பஜே
பொருள்: அனைத்து இடத்திலும் நிறைந்தவனே! குருவாயூரப்பனே! இப்படியாக உனது திருமேனி எழிலைக் கண்டு, தாமரை மலரில் அமர்ந்த நான்முகன் பரவசமும் பரபரப்பும் அடைந்தான். மிகுந்த ஆனந்தத்தில் மூழ்கினான். உன்னுடைய திருவடிகளான தாமரைகளில் விழுந்தான். மிகுந்த பக்தியுடன், குருவாயூரப்பனே! என்னுடைய எண்ணத்தை நீ அறிவாய். த்வைதமாகவும் அத்வைதமாகவும் காணப்படும் உனது திருமேனி குறித்த ஞானத்தை நீ அளிக்க வேண்டும் என்று வேண்டி நின்றான் அல்லவா? நானும் அப்படியே வணங்குகிறேன்.
10. ஆதாம்ரே சரணே வினம்ரம் அத தம்
ஹஸ்தேன ஹஸ்தே ஸ்ப்ருஸத்
போத: தே பவிதா ந ஸர்க்க விதிபி:
பந்த: அபி ஸஞ்ஜாயதே
இதி ஆபாஷ்ய கிரம் ப்ரதோஷ்ய நிரதாம்
தச்சித்த கூட; ஸ்வயம்
ஸ்ருஷ்டௌ தம் ஸமுதைரய! ஸ பகவன்
உல்லாஸய உல்லாகதாம்
பொருள்: பகவானே! குருவாயூரப்பா! உன்னை கண்ட ப்ரும்மா சிவந்த உனது திருவடிகளில் விழுந்து வணங்கினான். அப்படி வணங்கியவுடன். நீ உனது திருக்கரத்தால் ப்ரும்மாவின் கரத்தைப் பிடித்து, உனக்கு அந்த ஞானம் ஏற்படும். மேலும் ஸ்ருஷ்டி மூலம் உண்டாகும் ஸம்ஸார பந்தம் உனக்கு உண்டாகாது என்ற சொற்களைக் கூறி அவனை மிகவும் மகிழ்வு கொள்ளச் செய்தாய். அது மட்டும் அல்லாமல் நீ அவனுடைய மனதில் நுழைந்து அவனை ஸ்ருஷ்டியில் ஈடுபடத் தூண்டினாய். இப்படிப்பட்ட நீ எனக்கு நல்ல ஆரோக்யம் அளிப்பாயாக.