புதுச்சேரி: தட்டாஞ்சாவடி ஞானதியாகு நகர் முத்துமாரியம்மன் கோவிலில், நேற்று ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
தட்டாஞ்சாவடி ஞானதியாகு நகர் முத்துமாரியம்மன் கோவிலில், 16ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி, 10ம் தேதி சாகை வார்த்தலும், ஊரணி பொங்கல் வழிபாடும் நடந்தது. நேற்றிரவு 7.00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.