பழநி: உலக நலனுக்காக பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் லட்சார்ச்சனை விழா ஆடி 1 (ஜூலை 17)ல் துவங்குகிறது.
லட்சார்ச்சனை விழா துவக்கமாக ஆடி 1ல் பெரியநாயகியம்மன் கோயிலில் மாலை 6 மணிக்குமேல் சிவன், விநாயகரிடம் அனுமதி பெறுதல் நடக்கிறது. ஒவ்வொரு ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு சந்தனக்காப்பும் அலங்காரமும் செய்யப்படுகிறது.கடைசி வெள்ளியன்று லட்சார்ச்சனை ஹோமம், சுமங்கலி பூஜை, மகாஅபிஷேகமும், அம்மனுக்கு தங்கக்கவசம் அலங்காரம் செய்யப்படும். இரவு 8.30 மணிக்குமேல் பெரியநாயகிஅம்மன் வெள்ளித்தேரோட்டம் நடக்கிறது.