பதிவு செய்த நாள்
13
ஜூலை
2015
11:07
பனைக்குளம்: பனைக்குளம் ஒன்றிய பள்ளியில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சித்தலைவர் ஜெய்னுல் அஸ்லாம் தலைமை வகித்தார். முஸ்லிம் பரிபாலன சபை தலைவர் நசீர்அலி, ஜமாஅத் தலைவர் ஹம்சாத், அன்வர் ராஜா எம்.பி., அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் தர்மர், ஊராட்சி தலைவர்கள் புதுமடம் தர்வேஸ், சக்கரக்கோட்டை நூர்முகம்மது, புதுவலசை ஜபருல்லாகான், தேர்போகி ராதாகிருஷ்ணன், ஒன்றியக்கவுன்சிலர் வேலுச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர். அப்துல் காதர்ஜெய்லானி கிராஅத் ஓதினார். நசுரூதீன் நன்றி கூறினார்.
கீழக்கரை மக்தூமியா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் மதநல்லிணக்க இப்தார் விருந்து நிகழ்ச்சி நடந்தது. தலைவர் ஆர்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பட்டயத்தலைவர் அலாவுதீன் முன்னிலை வகித்தார். செயலாளர் கே.எம்.எஸ். சதக்கத்துல்லா, ராமநாதபுரம் மாவட்ட தொழில் முனைவோர் சங்க தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன், வர்த்தக சங்க பொருளாளர் சந்தானகிருஷ்ணன், அ.தி.மு.க., நகர் செயலாளர் வி.ராஜேந்திரன், மரியதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர். சங்க பொருளாளர் தர்மராஜ் நன்றி கூறினார்.