சுந்தரருக்கு குருபூஜை விழா வரும் 24ம் தேதி நடக்கிறது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூலை 2015 11:07
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் சிவன் கோவிலில் வரும் 24ம் தேதி சுந்தரர் குருபூஜை விழா நடக்கிறது.திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் சுந்தரரை ஆட்கொண்டு அருளாசி வழங்கிய சிறப்புடையது. இக்கோவிலில் ஆண்டு தோறும் சுவாதி நட்சத்திர தினத்தன்று சுந்தரருக்கு குருபூஜை விழா நடப்பது வழக்கம். இந்தாண்டு வரும் 23ம் தேதி காலை 8:00 மணிக்கு சுந்தரர் திருமணக்கோலத்தில் எழுந்தளும் நிகழ்ச்சியும், 10:00 மணிக்கு, திருமணம் நடக்கும் வேளையில் சிவபெருமான் அடிமை சாசனம் காட்டும் நிகழ்ச்சியும், காலை 10:30 மணிக்கு தடுத்தாட்கொண்ட புராணம் குறித்து ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது.மறுநாள்(24ம்தேதி) காலை 11:00 மணிக்கு 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகமும், சுந்தரருக்கு குருபூஜையும் நடக்கிறது. மதியம் 12:30 மணிக்கு அன்னத்தால் லிங்கம் அமைத்து மகேசுவரபூஜையும், பக்தர்களுக்கு அன்னதானமும் நடக்கிறது.மாலை 3:00 மணிக்கு சுந்தரர் சிவதீர்த்தத்தில் முதலைவாயிலிருந்து பிள்ளையெடுக்கும் ஐதீக நிகழ்ச்சியும், இரவு 9:00 மணிக்கு சுந்தரர் திருவீதியுலாவும் நடக்கிறது.