பதிவு செய்த நாள்
22
ஜூலை
2015
12:07
வேலூர்: வேலூரில், அக்னி வசந்த விழாவை முன்னிட்டு, தீமிதி திருவிழா நடந்தது. வேலூர், தோட்டப்பாளையம், தருமராஜா கோவில் தெருவில், திரௌபதியம்மன் சமேத தர்மராஜா கோவிலில், மகாபாரத பிரசங்க, அக்னி வசந்த விழா கடந்த, 10 நாட்களாக நடந்து வருகிறது. இதையொட்டி, நேற்று வேலூர் பாலாற்றில் தீமிதி திருவிழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர். தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நடந்தது. அசனாம்பேட்டை ஜெயபாலன் மகாபாரத சொற்பொழிவு ஆற்றினார். விழா ஏற்பாடுகளை, மகாபாரத கமிட்டி, விழாக்குழுவினர் செய்தனர்.