சாத்தூர்: சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை பொருட்கள் கணக்கிட்டப்பட்டன. கோயில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, செயல் அலுவலர் (பொறுப்பு) ரோஜாலி சுமதா, இருக்கன்குடி மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் மற்றும் அலுவலர்கள் காணிக்கை பொருட்களை கணக்கிட்டனர். ரொக்க தொகை ரூ. 26 லட்சம் 83 ஆயிரம் 795 ரூபாய், 90 கிராம் தங்கம், 750 கிராம் வெள்ளி பொருட்கள் பக்தர்கள் காணிக்கையாக கிடைத்தது.