நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு முத்துமாரியம்மன் கோவிலில் வரும் 24ம் தேதி செடல் திருவிழா நடக்கிறது. விழா கடந்த 16ம் தேதி கொடியே ற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் தினமும் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. இன்று (21ம் தேதி) காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அ பிஷேக ஆராதனை நடக்கிறது. மதியம் 2:00 மணிக்கு சாகை வார்த்தல் நடக்கிறது. இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து 23ம் தேதி காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து, 9:00 மணிக்கு பட்டு சாற்றும் நிகழ்ச்சிக்காக அம்மன் வீதியுலா நடக்கிறது. இரவு முத்துப் பல்லக்கில் அம்மன் வீதியுலா நடக்கிறது. 24ம் தேதி காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும்; 7:30 மணி முதல் செடல் திரு விழாவும் நடக்கிறது. இரவு திருத்தேரில் அம்மன் வீதியுலா நடக்கிறது. 25ம் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அற ங்காவலர் சுவாமிநாதன் தலைமையில் விழாக் குழுவினர்கள் செய்து வருகின்றனர்.