சாணார்பட்டி: சாணார்பட்டி ஒன்றியம் சிலுவத்தூர் ஊராட்சி வங்கமனூத்தில் உள்ள புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா இன்று(ஜூலை 23) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. நாளை புதுநன்மை, திருவிழா சிறப்பு திருப்பலி, இரவு வாணவேடிக்கை மற்றும் மூன்று சப்பர பவனி நடக்கிறது. ஜூலை 25ல் தேரடித்திருப்பலி மற்றும் பகல் திருவிழா நடக்கிறது. அன்று மாலை கொடியிறக்கம் மற்றும் நற்கருணை ஆசிர்வாதம் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு கலை நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவடையும். திருத்தல பாதிரியார், ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்துவருகின்றனர்.