பதிவு செய்த நாள்
25
ஜூலை
2015
11:07
கடலூர்: கருட ஜெயந்தியை முன்னிட்டு கடலூர், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற மகா ஹோமத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஜாதகத்தில் கர்ம வினை தோஷத்தைப் போக்கும் வல்லமை கொண்ட கருடாழ்வார் அவதார நாளான ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று கருடனை வழிபட்டால், சகல பாக்கியங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். அதனையொட்டி, ஆடி மாதம் வாதி நட்சத்திரமான நேற்று கடலூர், திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில், கருட மகா ஹோமம் நடைபெற்றது. அதனையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு திருக்கோவிலூர் எம்பெருமானுõர் ஜீயர் முன்னிலையில் ஆகம வித்வான் சிரோன்மணி மாலோல கண்ணன் கருட மகா ஹோமத்தை வேதபாராய ணத்துடன் நடத்தி வைத்தார். காலை 11:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் மற்றும் கருடாழ்வாருக்கு பால், தயிர், தேன், இளநீ ர், பன்னீர், சந்தனம், பழவகைகளால் பெரிய திருமஞ்சனம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு எதிர் சேவையாக கருடாழ்வார் புறப்பாடு நடந்தது. இரவு 8:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் மற்றும் கருடாழ்வாருக்கு புஷ்பய õகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன், தக்கார் கோவிந்தசாமி, எழுத்தர் ஆழ்வார், உபயதாரர்கள் ராமசாமி- கோவிந்தம்மாள் குடும்பத்தினர் செய்திருந்தனர்.