பழநி: ஆடிவெள்ளியை முன்னிட்டு பழநியில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஆடிவெள்ளியை முன்னிட்டு பெரியநாயகியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகா தீபாரதனை நடந்தது. மாலை 6.30 மணிக்குமேல் முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு லட்சார்ச்சனை நடந்தது. மாரியம்மன் கோயிலில் உச்சி காலத்தில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. லட்சுமிபுரம் மகாலட்சுமி கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சதிருஆவினன்குடிகோயில் துர்க்கையம்மன், அழகுநாச்சியம்மன்கோயில், வனதுர்க்கையம்மன்கோயில், புதுதாராபுரம்ரோடு ரணகாளியம்மன், புதுநகர் ரயில்வேகேட் முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்து. பக்தர்களுக்கு பால், கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.