ஜெகமுத்து மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக் கடன்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2015 11:07
விருத்தாசலம்: ஆடி இரண்டாம் வெள்ளி யொட்டி, விருத்தாசலம் அம்மன் கோவில்களுக்கு பக்தர்கள் பால்குடம், செடலணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விருத்தாசலம் ஜங்ஷன் சாலை, ஜெகமுத்து மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா, கடந்த 17ம் தேதி துவங்கியது. நேற்று (24ம் தேதி) முக்கிய நிகழ்வாக மணிமுக்தாற்றிலிருந்து காலை 10:30 மணிக்கு பால்குடம் சுமந்து, செடலணிந்து பக்தர்கள் ஊர்வலமாக கோவி லுக்கு வந்து அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 4:00 மணிக்கு திரு விளக்கு பூஜை, நாளை சாகை வார்த்தல் நடக்கிறது. அதேபோன்று, பெரியார் நகர் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம், செடலணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலு த்தினர். சந்தைதோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று காலை சித்தி விநாயகர், புற்று மாரியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபி÷ ஷக ஆராதனை நடந்தது. பக்தர்கள் மா விளக்கு வைத்து வழிபட்டனர். தென்கோட்டை வீதி மோகாம்பரி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.