நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு முத்து மாரியம்மன் கோவிலில் நேற்று செடல் திருவிழா நடந்தது. விழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவ ங்கியது. 21ம் தேதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மதியம் 2:00 மணிக்கு சாகை வார்த்தலும் நடந்தது. நேற்று முன்தினம் (23ம் ÷ ததி) காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து, 108 சங்காபிஷேகம், முத்துப் பல்லக்கு வீதியுலாவும், நேற்று 24ம் தேதி காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 7:30 மணி செடல் திருவிழாவும், இரவு தேரில் அம்மன் வீதியுலாவும் நடந்தது. இன்று (25ம் தேதி) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.