கடலூர்: கடலூர், புதுக்குப்பம் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் உள்ள பராசக்தி மாரியம்மன் கோவில் 50ம் ஆண்டு செடல் உற்சவத்தையொட்டி நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. ஜம்போ கிட்ஸ் பள்ளி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழா ÷ காவில் வளாகத்தில் நடந்தது. அப்பள்ளி இயக்குனர் காயத்ரி உமாசந்திரன் தலைமை தாங்கி, விழாவை துவக்கி வைத்தார். ஆயுதப்படை டி.எஸ்.பி., பாலசுப்ரமணியன் பரதநாட்டியம், பாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கினார். விழாவில் ஆயுதப் படை இன்ஸ்பெக்டர் பூபதி உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விழாக் குழுவினர் கிருஷ்ணன், குமார், ராமு ஆகியோர் செய்திருந்தனர்.