Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் ... வேண்டவராசி அம்மன் கோவிலில் ஆடி உற்சவம்! வேண்டவராசி அம்மன் கோவிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி ஊரணிக்கரையில் உலோக பூஜை பொருட்களின் புதையல்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி ஊரணிக்கரையில் உலோக பூஜை பொருட்களின் புதையல்!

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2015
10:07

பரமக்குடி: பரமக்குடி அருகே நெல்மடூர் கிராம ஊரணி கரையில் உலோகத்தால் ஆன பூஜை பொருட்கள் புதையலாக கண்டெடுக்கப்பட்டன.பரமக்குடியை அடுத்த பார்த்திபனூர் அருகே உள்ள நெல்மடூர் கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை பலத்த மழை பெய்தது. அங்குள்ள சிவன் கோயில் அருகில் இருக்கும் பெரிய ஊரணி கரையில் மண் அரிப்பு ஏற்பட்டது. அந்த வழியாக நடந்து சென்றவர்களின் கால்களில் சில பொருட்கள் இடறின. அவர்கள் அந்த இடத்தை தோண்டியபோது அங்கு 3 அடி ஆழத்திற்குள் பல ஆண்டுக்கு முன்பு கோயில்களில் பயன்படுத்தப்பட்ட சுட்ட மண் மற்றும் உலோகத்தால் ஆன பழங்கால ஒற்றை கண் குத்துவிளக்குகள், செம்பு, தாழி, அம்மிக்கல் புதைந்து இருந்தன.இதை அறிந்த கிராம மக்கள் அங்கு குவிந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் புதையல் பொருட்களை கைப்பற்றி பார்த்திபனூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். புதையல் கிடைத்த இடத்தை நேற்று தாசில்தார் காளிமுத்தன் ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது: நெல்மடூர் கிராம ஊரணி கரையில் பூஜை பொருட்கள் சிதிலமடைந்த நிலையில் கிடைத்துள்ளது. அவை சுட்ட மண், உலோகத்தால் செய்யப்பட்டவை. ஊரணி கரையிலும், அருகில் உள்ள பாழடைந்த சிவன் கோயிலிலும் மேலும் புதையல் இருக்கிறதா என ஆய்வு செய்ய உள்ளோம். கிடைத்துள்ள பொருட்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களிடம் ஒப்படைக்கப்படும், என்றார்.கிராம மக்கள் கூறுகையில்,"இங்குள்ள சிவன் கோயில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இக்கோயில் முற்றிலும் புதைந்து வருகிறது. சுவாமி சிலைகள் ஆங்காங்கே புதைந்துள்ளது. ஊரணி கரையில் கண்டெடுக்கப்பட்ட பூஜை பொருட்கள் இக்கோயிலில் பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம். மேலும் புதையல் பொருட்கள் இருக்க வாய்ப்புஉள்ளது,” என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar