பதிவு செய்த நாள்
28
ஜூலை
2015
11:07
திருவாரூர்: நீடாமங்கலம் அருகே ஞானபுரீயில் ஆஞ்ஜநேய சுவாமி சந்நிதியில் நேற்று பஞ்சதல 70 அடி உயர விமானம் கட்டுவதற்கான வாஸ்து பூஜை மிக சிறப்பாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம்–கும்பகோணம் சாலையில் ஆலங்குடி குருபகவான் கோவிலில் இருந்து ஒரு கி.மீ., தொலைவில் திருவோணமங்கல த்தில் ஸங்கடஹர ஸ்ரீமங்களமாருதி கோவில் அமைந்துள்ளது. ஆஞ்ஜநேய சுவாமிக்கும் இடபக்கத்தில் தனி சந்நிதியில் கோதண்ட ராமரும் அவருக்கும் வலபக்கம் சீதா பிராட்டியாரும், இடபக்கத்தில் லட்சுமுணரும் அருள் பாலிக்கின்றனர். சீதையின் வலப்பக்கம் சற்று கீழ் ஆஞ்சநேயர் நின்று வணங்கியநிலையில் கட்டளையிடுங்கள் என்ற தோரனையில் அருள் பாலிக் கின்றார். இடபக்கம் லட்சுமி நிருசிம்மர் தனி சந்நதியில் அருள் பாலிக் கின்றார்.
பிரதான சந்நிதியில் 32 அடி உயரத்தில் ஆஞ்ஜநேய சுவாமி வணங்கிய கோலத்தில் அருள் பாலிப்பது சிறப்பிலும், சிறப்பாக உள்ளது. மேலும் சஞ்சீவி மலையில் உள்ள சஞ்ஜிவினி, விஷல்யகரணி, சாவர்ண கரணி, சந்தாண கரணி என நான்கு வகை மூலிகைகளை இடுப்பில் அணிந்து,பக்தர்களின் பல்வேறு வேண்டுதல்களையும், பலவகையான நோயாளிகளை தீர்த்து வருகிறார். இதனால் தமிழகம் மற்றும் வெளிப்பகுதியில் இருந்து தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமிகளின் அருளை பெற்றுச் செல்கின்றனர். நேற்று கா லை 32 அடி உயர ஆஞ்சநேயர் சந்நிதியில் 70 அடி உயர பஞ்சதல விமானம் நிர்மானிப்பதற்கான வாஸ்த்து பூஜை நடந்தது. இதில் கணபதிபூஜை, விமாத்திற்கான வாஸ்த்து பூஜை, நவகிரக பூஜை வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் சொல்லி சிறப்பாக நடத்தினர். சென்னை கனகசபை பிள்ளை, அருணா அம்மா தம்பதியினர், ரவிக்குமார் பிள்ளை, ஞானக்குமார்பிள்ளை, ராஜ்குமார் பிள்ளை பூஜையை,அறங்கா வலர் ரமணி யண்ணா முன்னிலையில் துவக்கி வைத்தனர். பூஜையில் விஸ்வ சம்ரட் ஷன மாருதி சேவாஅறக்கட்டடளையைச் சேர்ந்த அறங்காவலர்கள் பங்கேற்றனர். கோவில் விமானம் கட்டுமான பணிகளுக்கு நிதி உதவி செய்யும் பக்தர்கள் ‘திடிண்தீச் ண்ச்ட்ணூச்டுண்டச்ணச் ட்ச்ணூதtடடி ஞிடச்ணூடிtச்ஞடூஞு tணூதண்t’ என்ற பெயருக்கு சிட்டியூனியன் வங்கியில் மாற்றத்தக்க வகையில் ‘டிடி’ எடுத்து நஸ்ரீ சங்கட ஹர மங்கள மாரு தி கோவில் ஞாஜபுரீ(ஆலங்குடி அருகில்) திருவோனமங்கலம் 612801, திருவா ரூர் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
மேலும் சிட்டியூனியன் வங்கி கணக்கு எண் 043109000128750 (ifsc codeno.ciub0000043) க்கும் செலுத்தலாம்.மேலும் தொடர்புக்கு 04374–269500 அல்லது அறங்காவலர் திரு.ஜெகநாதன் என்பரை 9003044445 என்ற கை பேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.