Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » இந்திர யாகம்
இந்திர யாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2015
17:54

1.கதாசித் கோபாலாந் விஹித மக ஸம்பார விபவாந்
நிரீக்ஷ்ய த்வம் ஸௌரே மகவ மதம் உத்வம்ஸிது மநா:
விஜாநந் அபி ஏதாந் விநய ம்ருது நந்த ஆதி பசுபாந்
அப்ருச்ச: க: வா அயம் ஜநக பவதாம் உத்யம: இதி

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஒரு நாள் ப்ருந்தாவனத்தில் இருந்த அனைத்து கோபர்களும், இந்திரனைக் குறித்து நிகழ்த்தப்படும் யாகத்திற்குத் தேவையான பொருட்களை சேமித்துக் கொண்டிருந்தனர். அப்போது நீ இந்திரனுடைய கர்வத்தை அடக்க எண்ணினாய். ஆகவே எதுவும் அறியாதவன் போல் உனது தந்தையிடம் சென்று, இந்த ஏற்பாடுகள் எதற்காக? என்று கேட்டாய் அல்லவா?

2. பபாஷே நந்த: த்வாம் ஸுத நநு விதேய: மகவத:
மக: வர்ஷே வர்ஷே ஸுகயதி ஸ: வர்ஷேண ப்ருதிவீம்
ந்ருணாம் வர்ஷ ஆயத்தம் நிகிலம் உபஜீவ்யம் மஹி தலே
விசேஷாத் அஸ்மாகம் த்ருண ஸலில ஜீவ்யா: ஹி பசவ:

பொருள்: குருவாயூரப்பா! உடனே நந்தகோபர் உன்னிடம் க்ருஷ்ணா! இந்திரன் இந்த உலகின் ஆதாரமான மழையை அளித்து இன்பத்தைத் தருகிறான். உலகில் உள்ள அனைவரும் பிழைப்பதற்கு மழையே ஆதாரமாக உள்ளது. நமது பசுக்கள் நீராலும் புல்லாலும் மட்டுமே வாழ்கின்றன அல்லவா? இதனால் நாம் ஒவ்வொரு ஆண்டும் இந்திரனுக்கு வேள்வி இயற்ற வேண்டும் என்று விளக்கினார்.

3. இதி ச்ருத்வா வாசம் பிது: அயி பவாந் ஆஹ ஸரஸம்
திக் ஏதந் ந: ஸத்யம் மகவ ஜநிதா வ்ருஷ்டி: இதி யத்
அத்ருஷ்டம் ஜீவாநாம் ஸ்ருஜதி கலு வ்ருஷ்டிம் ஸமுசிதாம்
மஹா அரண்யே வ்ருக்ஷா: கிம் பலிம் இந்த்ராய தததே

பொருள்: குருவாயூரப்பா! உன்னுடைய தந்தையின் சொல்லைக் கேட்டுக் கொண்டிருந்த நீ அவரிடம், நீங்கள் கூறுவதை ஏற்க முடியாது. இந்திரனால் மழை பொழிகிறது என்பது சரியல்ல. மண்ணில் உள்ள உயிர்களின் முன் ஜென்ம புண்ணியத்தால் மட்டுமே மழை பொழிகிறது. பெரிய காடுகளில் உள்ள மரங்கள் இந்திரனுக்கு வேள்வி நடத்தவா செய்கின்றன? என்று கூறினாய்.

4. இதம் தாவத் ஸத்யம் யத் இஹ பசவ: ந: குலதனம்
தத் ஆஜீவ்யாய அஸௌ பலி: அல பர்த்ரே ஸமுசித:
ஸுரேப்ய: அபி உத்க்ருஷ்டா: நநு தரணி தேவா: க்ஷிதிதலே
தத: தே அபி ஆராத்யா: இதி ஜகதித த்வம் நிஜ ஜநாந்

பொருள்: குருவாயூரப்பா! மேலும் நீ உனது தந்தையிடம், இந்தப் பசுக்கள் நமது குலத்திற்கு செல்வம் என்பது உண்மை. அவற்றுக்கு வேண்டிய புல் முதலியவற்றைக் கொடுத்து அவற்றின் பிழைப்பிற்குக் காரணமாக உள்ளது கோவர்த்தன மலையாகும். எனவே இந்த மலைக்கே வேள்வி இயற்ற வேண்டும். மேலும் இந்த உலகில் உள்ள வேதம் ஓதும் அந்தணர்கள் தேவர்களை விட உயர்ந்தவர்கள். ஆகவே அவர்களும் வணங்கத் தகுந்தவர்கள் என்றாய்.

5. பவத்வாசம் ச்ருத்வா பஹுமதி யுதா: தே அபி பசுபா:
த்விஜ இந்த்ராந் அர்ச்சந்த: பலிம் அதது: உர்சை: க்ஷிதிப்ருதே
வ்யது: ப்ராதக்ஷிண்யம் ஸுப்ருசம் அநமந் ஆதர யுதா:
த்வம் ஆத: சைல ஆத்மா பலிம் அகிலம் ஆபீர புரத:

பொருள்: குருவாயூரப்பா! உன்னுடைய சொற்களை யாதவர்கள் மிகவும் மதித்தனர். அதனை ஒப்புக்கொண்டனர். வேள்வி இயற்றும் அந்தணர்களை வணங்கினர். கோவர்த்தன மலைக்கு பூஜைப் பொருட்களை அர்ப்பணித்தனர். மிகுந்த பக்தியுடன் அந்த மலையை வலம் வந்தனர். நீ அந்த மலையின் ஆத்மாகவாக மாறி அவர்கள் கொடுத்ததை மகிழ்ந்து ஏற்றாய் அல்லவா?

6. அவோச: ச ஏவம் தாந் கிம் இஹ விதிதம் மே நிகதிதம்
கிரி இந்த்ர: நநு ஏஷ: ஸ்வ பலிம் உபபுங்க்தே ஸ்வ வபுஷா
அயம் கோத்ர: கோத்ர த்விஷி ச குபிதே ரக்ஷிதும் அலம்
ஸமஸ்தாந் இதி உக்தா: ஜஹ்ருஷு: அகிலா கோகுல ஜுஷ:

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ அவர்களிடம், இப்போது பாருங்கள். நான் கூறியது உண்மையாக உள்ளது அல்லவா? இந்த கோவர்த்தன மலை தனக்கு இட்ட பலியை உண்டுவிட்டது அல்லவா? மலைகளின் எதிரியான இந்திரன் இதனால் கோபம் அடைந்தாலும். நம்மை இந்த மலை நிச்சயம் காப்பாற்றும் என்றாய். இதனைக் கேட்ட ஆயர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர்.

7. பரிப்ரீதா: யாதா: கலு பவத் உபேதா: வ்ரஜ ஜுஷ:
வ்ரஜம் யாவத் தாவந் நிஜ மக விபங்கம் நிசமயந்
பவந்தம் ஜாநந் அபி அதிக ரஜஸா ஆக்ரந்த ஹ்ருதய:
ந ஸே ஹே தேவ இந்த்ர: த்வத் உபரசித ஆத்ம உந்நநி: அபி

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இப்படியாக ஆயர்கள் அனைவரும் மகிழ்ந்து பின்னர் உன்னுடன் ப்ருந்தாவனத்திற்குச் சென்றனர். இதற்கிடையே தனக்கு உரிமையான வேள்வி தடைப்பட்டதை இந்திரன் அறிந்தான். உனது வலிமை என்ன என்று உணர்ந்திருந்தும். தனது இந்திர பதவி உன்னால் அளிக்கப்பட்டது என்பதை அறிந்திருந்தும் - ராஜஸ குணம் மிகவும் அதிகமான மனதை உடையவனாக, மிகவும் கோபம் கொண்டான்.

8. மநுஷ்யத்வம் யாத: மது பித் அபி தேவேஷ அவிநயம்
விதத்தே சேத் நஷ்ட: த்ரிதச ஸதஸாம் க: அபி மஹிமா
தத: ச த்வம் ஸிஷ்யே பசுப ஹதகஸ்ய ச்ரியம் இதி
ப்ரவ்ருத்த: த்வாம் ஜேதும் ஸ கில மகவா துர்மத நிதி:

பொருள்: குருவாயூரப்பா! இந்திரன். மிகுந்த கர்வத்துடன். மது என்ற அசுரனை அழித்த அந்த நாராயணன் மனித உருவம் எடுத்து, தேவர்களின் பெருமைகளை குறைத்து கூறுவானாகில், தேவர்கள் நிலை என்ன? ஆகவே அந்த இடையர்களின் பொருட்களையும், க்ருஷ்ணனின் பெருமைகளையும் அழித்து விடுகிறேன் என்று விபரீதமான எண்ணம் கொண்டான் அல்லவா?

9. த்வத் ஆவாஸம் ஹந்தும் ப்ரளய ஜலதாந் அம்புர புவி
ப்ரஹிண்வந் விப்ராண: குலிசம் அயம் அப்ர இப கமந:
ப்ரதஸ்தே அந்யை: அந்த: தஹந மருத் ஆத்யை: விஹஸிதோ
பவந் மாயா ந ஏவ த்ரி புவந பதே மோஹயதி கம்

பொருள்: மூன்று உலகிற்கும் நாயகனே க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னுடைய இருப்பிடத்தை அழிக்கும் எண்ணத்துடன், தனது வஜ்ராயுதம் எடுத்துக் கொண்டும், ஐராவதம் என்ற யானை மீது அமர்ந்தும் இந்திரன் புறப்பட்டான். ப்ரளய காலத்தில் மழையை விடாது பெய்கின்ற மேகக்கூட்டங்களை ஏவினான். இதனைக் கண்டு அக்னி, வாயு முதலான தேவதைகள் மனதிற்குள் பரிகாசம் செய்தன. இருப்பினும் அவன் தொடர்ந்தான். உன்னுடைய மாயைக்கு மயங்காதவர் உண்டோ?

10. ஸுர இந்த்ர: க்ருத்த: சேத் த்விஜ கருணயா சைல க்ருபயா அபி
அநாதங்க: அஸ்மாகம் நியத இதி விச்வாஸ்ய பசுபாந்
அஹோ கிம் ந ஆயாத: கிரி பித் இதி ஸஞ்சிந்த்ய நிவஸந்
மருத் கேஹ அதீச ப்ரணுத முர வைரிந் மம கதாந்

பொருள்: முரன் என்ற அரக்கனை அழித்த முராரியே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ ஆயர்களிடம், பயப்பட வேண்டாம்! இந்திரன் கோபம் கொண்டு வந்தாலும், வேதம் ஓதும் அந்தணர்கள் உள்ளதாலும், கோவர்த்தன மலையின் கருணை மூலமாகவும், நமக்கு நல்ல பயனே ஏற்படும் என்றாய். தொடர்ந்து உனது மனதில், இந்திரன் ஏன் இன்னும் வரவில்லை? என்று சிந்தித்து, அவனுக்காகக் காத்து நின்றாய். இப்படிப்பட்ட நீ எனது நோய்களை நீக்க வேண்டும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.