Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரசனும் பாகவதரும்.. துறவியின் கதை துறவியின் கதை
முதல் பக்கம் » ராமகிருஷ்ண உபநிஷதம்
பெண்மையும் தாய்மையும்!
எழுத்தின் அளவு:
பெண்மையும் தாய்மையும்!

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2015
05:07

பெண்ணாய்ப் பிறந்த எல்லோரும் தேவியினுடைய அம்சங்களே யன்றி வேறல்ல என்பது பகவான் ராம கிருஷ்ணர் அடிக்கடி வற்புறுத்திச் சொன்ன விஷயம். தேவி தன்னைப் பல பகுதிகளாகச் செய்து கொண்டு நிற்கிறாள். அப்பகுதிகளே உன் பார்வைக்குள் வரும் ஸ்திரீகள் அனைவரும். ஆனபடியால் அவர்களில் யாரைக் கண்டாலும் அம்மன் எனக்கு தரிசனம் கொடுக்கிறாள் என்று மனதை ஒரு அம்மன் கோயிலுக்குள் புகும்போது நீ கொள்ளும் பாவத்தில் நிறுத்திக் கொள். நல்ல சுபாவம் படைத்தவராயினும் சரி, வேறு விதமானவராயினும் சரி, ஸ்திரீகள் அனைவரும் தேவயின் சொரூபம் என்று அறிந்து வணங்கு. உனக்கும் எனக்கும் அவர்களைப் பற்றித் தூஷிக்கவோ பாராட்டவோ என்ன உரிமை? உலகத்துக்குக் காரணமான தேவியின் விளையாட்டை நாம் அறிவோமா? வணங்குவதே நம்முடைய கடமை. பெண்ணாய்ப் பிறந்த எல்லோருமே தேவியின் சொரூபம், அலங்கரிக்கப்பட்ட அம்மன் விக்கிரகத்தைப் பூஜித்து வணங்குவதைப் போலவே உயிருள்ள இம்மூர்த்திகளையும் தேவி என்று பாவித்து வணங்கு.

குருவே! பெண் குலத்தினிடம் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? என்று ஒரு சீடர் பரம ஹம்ஸரைக் கேட்டார்.

ஆண்டவனுடைய அருள்பெற்று அவனுடைய தரிசனத்தை அடைந்தவன் பெண்களைப்பற்றிப் பயப்பட வேண்டியதில்லை. பார்வைக்குள் விழும் ஸ்திரீகள் அனைவரையும் உலக மாதாவின் விக்கிரங்களாகவே காண்பான். விசுவரூபம் கொண்ட தேவியே பல ஸ்திரீகளாகப் பிரிந்து தோற்றம் கொடுக்கிறாள் என்று எல்லா ஸ்திரீகளையும் பூஜிப்பான். தன்னைப் பெற்ற தாயை அன்புடன் வணங்குவதுபோல் அனைவரையும் வணங்குவான்.

குருவே! காமவிகாரத்தை எப்படி வெல்வது? அதைச் சொல்லுங்கள். அதைத்தான் சொல்லுகிறேன்; எந்த ஸ்திரீயைக் கண்டாலும் அவளை உன் தாயாகப் பாவித்துக் கொள். அவளுடைய பாதங்களை நோக்கி வணங்கு, அப்போது கெட்ட எண்ணங்கள் பறந்து போகும்.

புருஷனுடன் இருந்தாலும் கன்னி வாழ்க்கை வாழும் மங்கையர்களும் உண்டு. அவர்கள் ஈசுவரியின் பூரண அவதாரமே என்று சொல்லலாம். தாந்திரீக முறையில் ஸ்திரீபக்தர்களுடன் கலந்து தேவியைச் சிலர் பூஜை செய்கிறார்களே, அதைப்பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? என்று ஒரு சீடர் ராமகிருஷ்ணரைக் கேட்டார். வங்காளத்திலும் வேறு சில பிராந்தியங்களிலும் சாக்த  சம்பிரதாயத்தைச் சிலர் பின்பற்றி வருகிறார்கள். அவர்களில் துன்மார்க்கர்களும் உண்டு. இதை உத்தேசித்தே சீடர் அந்தக் கேள்வியைக் கேட்டார். ராமகிருஷ்ணரும் அடியில் கண்ட எச்சரிக்கை செய்தார்.

இந்த முறைகளில் அபாயம் உண்டு. சாதாரண மக்கள் இம்முறையை அனுசரித்தல் கூடாது. மிகவும் கடினமான முறையை எடுத்துக்கொண்டு பாபத்தில் விழ நேரிடும். ஒரு ஸ்திரீயை மகா சக்தியாகக் கொண்டு அவளைப் பூஜை செய்யும் வழி தாந்திரீக முறையில் சொல்லப்பட்டிருக்கிறது. இதை மூன்று விதமாகச் செய்யலாம். பக்தன் தன்னை மகனாகப் பாவித்தல் ஒரு வழி; தாயை எவ்வாறு மகன் அன்புடன் நெருங்கிப் பூஜிப்பானோ அந்த அன்பை மேற்கொண்டு உபாசித்தல், மற்றொரு வழி, சகி அல்லது தோழியாகத் தன்னை பாவித்துக்கொண்டு அந்த பாவனையின் மூலமாகப் பூஜித்தல்.

இந்த வழிகளில் மகனாக நின்று மனதை அந்நிலையில் பரவசப்படுத்தி, பெற்ற தாயிடம் குழந்தை அன்பு செய்வதுபோல் தேவியைப் பூஜித்தலே மேலான வழி, தோழி நிலையை அடைந்து பூஜிப்பதும் நல்லதே. மூன்றாவது முறை யொன்றும் உண்டு. அதுதான் தலைவன் - தலைவி பாவனை. இது மிகவும் அபாயமான முறை, அதைப் பின்பற்றல் கூடாது.

அர்ச்சாவதாரம் அல்லது விக்கிரகத்தை வைத்துப் பூஜித்தலைப்போல் உடலும் உயிரும் கொண்ட பெண்ணைத் தேவியாகப் பாவித்து ரகசியமாகப் பூஜை செய்யும் முறை தாந்திரீகத்தில் சொல்லப்படுகிறது. இதைப் பரமஹம்ஸர் வேண்டாம் என்கிறார். தம் சொந்த அனுபவத்தையும் சொல்லி இருக்கிறார். இரண்டு வருஷங்கள் நான் இந்தத் தாந்திரீக சாதனத்தில் கழித்திருக்கிறேன். சகி பாவனை, குழந்தை பாவனை ஆகிய இரண்டும் அப்பியசித்தேன். என் சுபாவம் குழந்தை பாவனைக்கு இசைந்த சுபாவம். தேவியைத் தலைவன் பாவனையை மேற்கொண்டு நான் உபாசித்ததில்லை. யாருக்குமே அது கடினமான முறை, வேண்டாம். என்பேன்.

நீங்கள் ஏன் பத்தினியுடன் இல்லற முறையில் வாழவில்லை? என்று ஒருவர் கேட்க, பகவான் ராம கிருஷ்ணர் ஒரு கதையைச் சொன்னார். நீ கேட்ட கேள்விக்கு ஒரு கதையைச் சொல்லுகிறேன். ஒரு நாள் பரமசிவனுடைய குழந்தையாகிய கணேசன் ஒரு பூனையை நகத்தால் கீறிக் காயம் பண்ணி விட்டான்! பிறகு தாயிடம் திரும்பிப் போனபோது அவளுடைய கன்னத்தில் ஒரு காயம் இருக்கக் கண்டு அம்மா, இதென்ன? உன்னை யார் காயப்படுத்தினது? என்று கேட்டான். அதற்குப் பார்வதி, மகனே, இது நீ செய்த வேலையல்லவோ? உன் நகத்தினால் கீறின காயம் இது என்றான். இதென்ன விபரீதம்? நான் எப்போது உன்னைக் கீறினேன், அம்மா? என்றான் கணேசன். கண்மனி! நீ பூனையைத் தொந்தரவு செய்து கீறினதை மறந்து விட்டாயா? என்றாள் கவுரி.

ஆமாம்: கீறினேன், அது உன் கன்னத்துக்கு எப்படி வந்தது? என்று கணேசன் கேட்டான். மகனே, உலகமெல்லாம் என் உடல்தானே? யாருக்கு என்ன, காயமுண்டானாலும் அது எனக்கு உண்டான காயமே  என்றாள் தாய். இதற்குமேல்  கணேசன் யாரை விவாகம் செய்து கொள்ள முடியும்? எந்தப் பெண்ணைக் கண்டாலும் அவளைத் தன் தாயாகவே கண்டான். பெண்மை அனைத்தும் அவனுக்குத் தாய்மையாகவே போய் விட்டது. விவாகம் செய்துகொள்ளும் எண்ணத்தையே ஒழித்தான். என் கண்ணுக்கும் அப்படியே எந்த ஸ்திரீயும் பார்வதியம்மனாகவே தோற்றம் தருகிறாள். நான் என்ன செய்வது! என்றார் பரமஹம்ஸர்.

ஊமையும் பேசும்!

ஒருநாள் புகழ்பெற்ற பிரம்ம சமாஜ ஆசாரியரான கேசவ சந்திரசேனர் பகவான் ராமகிருஷ்ணரை தக்ஷணேசுவரக் கோயிலில் கண்டு பேசிக் கொண்டிருந்தார்.

என்ன காரணமோ, ரொம்பப் படித்த வித்வான்களுங்கூட மூர்க்கர்களாகவே இருக்கிறார்கள். சாஸ்திரங்களை யெல்லாம் நன்றாகக் கற்றும் ஞானம் அடையாமல் ஆசைகளையும் பற்றுகளையும் விடாமல் தத்தளிக்கிறார்கள். இது வியப்பாக இருக்கிறது! என்றார் கேசவசந்திரர்.

பருந்துகள் ஆகாயத்தில் பறக்கின்றன. வெகு உயரமாகத்தான் சுத்த வாயு மண்டலத்தில் பறக்கின்றன. ஆனாலும் அவற்றின் கண்கள் கீழே செத்த பிராணி, மாமிசம், எலும்பு இவற்றைத்தான் தேடி பார்த்துக் கொண்டிருக்கும் என்றார் ராம கிருஷ்ண பரமஹம்ஸர்.

உயர்ந்த நூல்களைப் படித்தாலும் மனம் காமப் பொருள்களிலேயே உலாவித் திரியும். படிப்பு வேறு, ஆசைப்படும். விஷயம் வேறு. ஆசைகளினாலும் பற்றுகளினாலும் நாம் நூல்களிலிருந்து ஞானம் அடைவது தடைப்படுகிறது.

படிப்பதனால் மட்டும் பயன் பெறமுடியாது. மொழிப் பயிற்சியைப் பெறுவோம். நல்ல சுலோகங்களை ஒப்பிக்கலாம். மந்திரங்களைத் தவறின்றி உச்சரிக்கலாம். அவ்வளவுதான். எந்த விஷயங்களில் ஆசை செலுத்துகிறோமோ அவைதான் நம்மை உயர்த்துகின்றன. அல்லது தாழ்த்துகின்றன. மண்ணும், பொன்னும், பெண்ணும் நம் உள்ளத்தைக் கவர்ந்து நிற்க விட்டோமானால் எவ்வளவு சாஸ்திரங்கள் ஓதினாலும் அறிவும் வராது; மோக்ஷமும் கிட்டாது. படித்து விட்டு மிக நன்றாக உபந்நியாஸம் செய்யலாம். பிரம்மம், பரம்பொருள், ஞானயோகம், பக்தியோகம், மூலப் பிரகிருதி, ஜீவாத்மா, பரமாத்மா, என்றெல்லாம் பேசி, கேட்பவர்களைப் பிரமிக்கச் செய்யலாம். ஆனால், பேசும் விஷயங்கள் பேச்சளவில்தான் நிற்கும். உள்ளம் உருகி ஆண்டவனிடத்தில் மனதைச் செலுத்தினால் படிப்பின் பயனை அடைவோம். இல்லாவிடில் சாஸ்திரமும் புராணமும் ஒன்றும் பயன்தராது. ச,ரி,க,ம,ப,த,நி என்று சுவரங்களின் பெயரைச் சொல்லலாம் ஒருவர் ஆனால்  சுவரமும் சங்கீதமும் வேறு விஷயம். சரியான மொழிகளைக் கோத்து ஞான வைராக்கியத்தைப் பற்றிப் பிரசங்கம் செய்வது எளிது. ஆனால் ஞானமும் வைராக்கியமும் தோய்ந்த மனோ நிலையும் வாழ்க்கையும் கடினம்.

பஞ்சாங்கத்தில் இந்த மாதத்தில் இந்தத் திதியில் இத்தனை மழை பெய்யும் என்று கணக்கிட்டு எழுதியிருப்பார்கள். அப்படியே மழையும் பெய்யலாம். ஆனால் ஒருவன் பஞ்சாங்கத்தின் ஏடுகளை எடுத்துப் பிழிந்தால் தண்ணீர் வடியுமா? எவ்வளவு கசக்கிப் பிழிந்தாலும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வழியாது. தரும நூல்களில் அநேக நல்ல விஷயங்களைப் படிக்கலாம். ஆனால் அவற்றை ஓதுவதினாலேயே ஒருவன் பக்தி அடைந்து விடமுடியாது. அந்த நூல்களில் சொல்லியபடி ஆசைகளை அடக்கினால் பக்தி உண்டாகும்.

ஆண்டவன் சன்னிதானத்தில் படிப்பும் மேதையும் எம்மாத்திரம்? அங்கே ஊமையும் பேசும்; கபோதிகளுக்கும் கண் தெரியும்; சாஸ்திரங்கள் எல்லாம் படித்தவனும் படிப்பே யில்லாதவனும் ஆண்டவனுக்கு முன் ஒன்றே.

கஞ்சா கஞ்சா என்று ஆயிரம் தடவை வாயால் சொன்னாலும் போதை உண்டாகாது அல்லவா? கொஞ்சம் கஞ்சா எடுத்து இடித்துத் தண்ணீரில் கரைத்துக் குடித்தால்தான் போதை உண்டாகும். மனசை ஆண்டவனிடம் செலுத்தாமல் ஆயிரம் நாமங்களையும் வாயால் உரக்கச் சொல்லுவதில் பயனில்லை. மனசை ஒரு நிலையில் நிறுத்தித் தியானித்து அப்பியசிக்க வேண்டும். அப்போது தான் பரம்பொருளைக் காண்போம்.

ஒருவன் பள்ளிக்கூடச் சுவரில் மாட்டியிருக்கும் இந்தியா தேசத்தின் படத்தில் காசி என்று புள்ளியைப் பார்த்துவிட்டு, நான் காசியைப் பார்த்து விட்டேன் என்று பேசுவதைப் போன்றதுதான். சாஸ்திர நூல்களைப் படித்துவிட்டுப் பரம்பொருளை மற்றவர்களுக்கு விளக்கப் பார்ப்பது. படத்தில் சரியாகத்தான் ஊர்களும் மலைகளும் குறிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் படத்தைப் படித்துவிட்டதால் நதிகளையும் ஊர்களையும் பார்த்தப்படி யாகுமா? நூல்களும், தையல் நூலைப் போலத்தான் சில சமயம் சிக்கலாய்ப் போகும். சிக்கலாகிப் போய்த் தைக்கப் பயன்படாமல் போன் நூலைப் போலவே, பக்தியில்லாமல் ஒழுக்கமில்லாமல், தியானமில்லாமல் படிக்கப்பட்ட தத்துவமும் சாஸ்திரமும் சிக்கலாகி ஒன்றுக்கும் உதவாது போகும். ஆண்டவன் அருளால், அடக்கமும் பக்தியும் பெறாமற் போனால் ஒருவன் கற்ற நூல்கள் எல்லாம் ஆணவத்தைப் பெருக்குமே யொழியப் பயன்படாது. அடைந்த படிப்பினால் நான்என்பது முன்னைவிடப் பெரிதாக  வளர்ந்து உள்ளத்தில் ஞானத்துக்கு இடம் தராமல் தடுத்துவிடும்.

அகங்காரம் என்பது ஒரு சாம்பற்குப்பை போன்றது. அதன்மேல் எவ்வளவு அறிவுத் தண்ணீர் ஊற்றினாலும் உருகினாலொழிய அகங்காரம் நீங்காது. எவ்வளவு சம்ஸ்கிருதம் ஓதினாலும் எவ்வளவு மனனம் பண்ணினாலும், அவையெல்லாம் சாம்பற்குப்பைமேல் ஊற்றின் தண்ணீரைப் போலாகிவிடும். பரம்பொருளைக் காணும் வழியைத் தான் நூல்கள் காட்டும்; ஒழுக்கமும் பக்தியும் தியானமுமின்றி நூல்களைத் திரும்பத் திரும்பப் படிப்பதினால் மட்டும் பயன் உண்டாகாது.

கடையில் வாங்க வேண்டிய சாமான்களை ஒரு சீட்டில் எழுதிக் கொண்டு போய்ச் சாமான்களை விலைக்கு வாங்கிக் கொள்கிறோம். இன்னது வாங்க வேண்டும் என்று தெரிந்து விட்ட பிறகு, சீட்டில் என்ன விசேஷம்? சாஸ்திரங்களில் சொல்லப்படுவதெல்லாம், இந்த மார்க்கம் சென்றால் ஆண்டவனை அடையலாம், என்பதுதான் மார்க்கத்தை அறிந்த பிறகு அடுத்தபடி அதில்  நடக்க வேண்டியது அவசியம். அதைச் செய்யாமல் சீட்டையே மனனம் செய்து கொண்டிருந்தோமானால் கடைச்சாமான் வீட்டுக்கு வருமா? ஒரு ஊருக்கு வழி தெரிந்து கொண்டு அந்த வழியைப் பிடித்து நடந்து சென்றால் ஊர் போய்ச் சேருவோம். வழி தெரிந்தால் மட்டும் போதாது. அந்த வழியில் நடந்தால்தான் ஊரை அடையலாம்.

சைதன்ய தேவர் தெற்கே யாத்திரை சென்ற போது, ஒரு பண்டிதர் கீதையைப் படித்து உபந்நியசம் செய்து கொண்டிருந்ததைக் கண்டார். கேட்டுக் கொண்டிருந்த கூட்டத்தில் ஒரு பக்தன் உட்கார்ந்திருந்தான். அவனுக்குக் கீதையில் ஒரு சுலோகத்தின் பொருளும் தெரிந்துகொள்ளும் சக்தியில்லை. ஆனால் உபந்நியாசம் நடந்து கொண்டிருந்தபோது, அவன் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது.

எதற்காக அழுகிறாய்? அப்பனே! என்ன தெரிந்து கொண்டாய்? என்று சைதன்ய தேவர் கேட்டார். அதற்கு அந்த பக்தன், தேர்மேல் கிருஷ்ண பகவானையும் அருச்சுனனையும் காண்கின்றேன். அதனால் என் கண்களில் கண்ணீர் பெருகுகிறது. உபந்நியாசம் ஒன்றும் என் காதில் விழவில்லை. என்றானாம். எழுதப் படிக்கத் தெரியாத இந்த பக்தனே மெய்ஞ்ஞானி. கண்ணன்பேரில் அவனுக்கு உண்டான காதலே எல்லா சாஸ்திரங்களின் பொருளும்.

 
மேலும் ராமகிருஷ்ண உபநிஷதம் »
temple news
ராமகிருஷ்ண பரமஹம்ஸருடைய உபதேசங்கள் உபநிஷத்துக்குச் சமானம் என்றால் மிகையாகாது. பழைய காலத்து ... மேலும்
 
temple news
பல்வேறு வழிகளில் நாம் கடவுளை உபாசித்துக்காட்சியும் அருளும் பெறலாம். ஆற்றங்கரையில் பல படித்துறைகள் ... மேலும்
 
temple news
பெரிய வியாபாரி ஒருவர் பரமஹம்ஸரிடம் வந்து சுவாமி! நான் என்னுடைய சொத்தெல்லாதவற்றையும் குடும்பத்துக்கு ... மேலும்
 
temple news
சித்த சுத்தி: அழகிய ஒரு ஸ்திரீயைப் பார்க்கும்போது உலக மாதாவான தேவியைத் தியானிக்க வேண்டும். முன் ... மேலும்
 
temple news
சாஸ்திரங்களும் புராணங்களும் படித்த ஒரு பிராமணர் அரசனிடம்போய் அரண்மனையில் புராணம் வாசித்துச் சொல்லத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar