பதிவு செய்த நாள்
31
ஜூலை
2015
12:07
திருத்தணி: கன்னியம்மன் கோவிலில், நேற்று, தீமிதி திருவிழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது.திருத்தணி அடுத்த, கார்த்திகேயபுரம் இருளர் கிராமத்தில், கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆடி மாதத்தை முன்னிட்டு, தீமிதி திருவிழா நேற்று காலை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. விழாவை ஒட்டி, காலை, 8:00 மணிக்கு, 50க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் சுமந்தவாறு, ஊர்வலமாக கோவில் வளாகம் வந்தடைந்தனர். பின், மூலவர் அம்மனுக்கு, பாலாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தன. இன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், வரும், 2ம் தேதி மாலை தீமிதி திருவிழாவும் நடைபெறுகின்றன. தினமும், மூலவர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெற உள்ளன.