விருத்தாசலம்: பூதாமூர் செங்கழனி மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் சுமந்து, செடல் அணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். விரு த்தாசலம் பூதாமூர் செங்கழனி மாரியம்மன் கோவில் 33ம் ஆண்டு செடல் திருவிழா, கடந்த 19ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். நேற்று முக்கிய நிகழ்வாக காலை 10:00 மணியளவில் மணிமுக்தாற்றில் இருந்து ஏராளமானோர் தீச்சட்டி, பால்குடம், காவடி சுமந்தும், செடலணிந்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று மஞ்சள் நீர் உற்சவம், நாளை அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.