மயிலம்: மயிலம் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி உற்சவம் துவங்கியது. மயிலம் மலையடிவாரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் ஆடி உற்சவம், கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மயிலம் குளக்கரையிலிருந்து பக்தர்கள் பூங்கரகத்தை முக்கிய வீதிகள் வழியாக ÷ காவில் வளாகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அம்மனுக்கு வழிபாடு மகா தீபாரா தனை நடந்தது. தினசரி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வீதியுலா நடந்து வருகிறது. நேற்று ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காலை 8 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு வழிபாடு நடந்தது. மதியம் 1:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் அன்னதானம் வழங்கினர்.