பதிவு செய்த நாள்
01
ஆக
2015
12:08
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்ர்கள் வந்து ஸ்வாமியை தரிசனம் செய்கின்றனர். பவுர்ணமி திதியன்று, அண்ணாமலையாரை தரிசனம் செய்து விட்டு, அங்குள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.இதனால், ஒவ்வொரு பவுர்ணமி அன்றும், திருவண்ணாமலை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். நேற்று முன்தினம், ஆடிமாத பவுர்ணமி கிரிவலம், மாலை, 6.03 மணிக்கு துவங்கி, நேற்று மாலை, 4.56 மணிக்கு முடிவடைந்தது. இந்நிலையில், ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். அண்ணாமலையார் கோவிலில், இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசனத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்வாமியை தரிசனம் செய்தனர்.பவுர்ணமியை முன்னிட்டு அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.