மைசூரு: மைசூரு மாவட்டம், நஞ்சன் கூட்டிலுள்ள, வரலாற்று பிரசித்தி பெற்ற, ஸ்ரீகண்டேஸ்வரர் கோவில் உண்டியலில், ஜூலையில், 96 லட்சம் ரூபாய் காணிக்கை வசூலாகியுள்ளது. நஞ்சன் கூடு ஸ்ரீகண்டேஸ்வரர் கோவிலில், இம்மாதம் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு கிளை ஊழியர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களின் உறுப்பினர்கள், உண்டியல் பணத்தை எண்ணினர்.உண்டியலில், 96.33 லட்சம் ரூபாய் ரொக்கம், 115 கிராம் தங்கம், 2.3 கிலோ வெள்ளி, எட்டு டாலர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.