கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
முண்டாசுக் கட்டுண்டு முழுவல்ல வெட்டுண்டுமுதிர்ந்த பிரம்பு முண்டுமுறைகாவல் செல்வதற்கே சப்பாணி தன்னுடனேமுன்னோடி யானு முண்டு.கொண்டாடும் பக்தருண்டு கோழிகிடாப் பலியுண்டுகுறையாத படைய லுண்டுகொடுமைகள் அழித்தருளக் கொடுவாளும் அரிவாளும்குத்தீட்டி தானு முண்டுகண்டாங்கிச் சேலையொளிர் ஏகாத்தா ராக்கம்மைகனிவுமிகு அருளு முண்டுகணப்போதும் துயிலாத உறங்காப் புளியுண்டுதுணைசின்னக் கருப்ப னுண்டுகொண்டாடிப் போற்றுவார் குறையெல்லாம் தீரவேகுலங்காத்து நிற்கும் அரசேகுறைவிலா ராங்கியத்தில் முறைகாக்கும் பேரரசேபெரியகருப்பண்ண துரையேஅருளாடும் ராங்கியக் கருப்பரிவர் ஓங்கியேஅரசாளும் கோவில் வாசல்ஆதரவு தந்தருளும் மாதிருவர் ராக்கம்மைஏகாத்தா அமரும் வாசல்இருளாடும் பேயனுடன் இராக்கதப் பிசாசுகளைஎதிரடக்கி நிறுத்தும் வாசல்ஏவலுடன் பில்லிசூன்யம் இன்னபிற மோடிகளைப்போவெனவே விரட்டும் வாசல்இருபேராம் சப்பாணி முன்னோடி யானென்றும்முறைகாவல் புரியும் வாசல்இரவுபகல் எப்போதும் உறங்காப் புளியெனும்விருக்ஷமது வளரும் வாசல்திருவாசல் தேடிவர பெருவாழ்வு புகழ்நல்கும்கருப்பண்ணன் கோவில் வாசல்சிறுபோது நினைத்தாலும் பெரும்பேறு தானருள்வான்பெரியகருப்பண்ண துரையே.