பரமக்குடி: பரமக்குடி நகராட்சி புதுநகர் முத்துமாரியம்மன் கோயிலில் முளைக்கொட்டு திருவிழா நடந்தது. இதையொட்டி,அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் கீர்த்திகா தலைமை வகித்தார். புதுநகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் சாத்தையா, செயலர் வேலுச்சாமி, பொருளாளர் கேசவன் முன்னிலை வகித்தனர். கோயில் டிரஸ்டி பூமிநாதன் வரவேற்றார். விழாவையொட்டி, பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர். முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது.