அருணகிரிபட்டினம் முத்துமாரியம்மன் கோயில் முளைப்பாரி உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2015 11:08
தேவகோட்டை: தேவகோட்டை அருணகிரிபட்டினம் முத்துமாரியம்மன் கோயில் ஆடி முளைப்பாரி திருவிழா கடந்த 28 ந்தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலிலிருந்து பக்தர்கள் பூக்கள் எடுத்து வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் நடத்தினர். பக்தர்கள் முளைப்பாரி, சக்திகரகம் எடுத்து வழிபட்டனர்.நிறைவு நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.