திருக்கோஷ்டியூர் ஆடிப்பூரம் உற்சவம் நாளை துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2015 12:08
திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் நாளை ஆடிப்பூர உற்சவம் துவங்குகிறது. நாளை இரவு 6.48 மணிக்கு மேல் உற்சவத்திற்கான சேனை முதல்வர் புறப்பாடு நடைபெறும். தொடர்ந்து மறுநாள், காலை 7.05 மணிக்கு பெருமாள், ஆண்டாள் கல்யாண மண்டபம் எழுந் தருளலும், பின்னர் காப்புக்கட்டுதலும் நடைபெற்று உற்சவம் துவங்கும். இரவில் ஆண்டாளும் பெருமாளும் திருவீதிப் புறப்பாடும் நடைபெறும். தொடர்ந்து, தினசரி காலையிலும் இரவிலும்திருவீதி புறப்பாடு நடைபெறும்.ஆக.,14 காலை அலங்கார திருமஞ்சனம், இரவில் தங்கப்பல்லக்கில் திருவீதி புறப்பாடும்,ஆண்டாள் பிறந்த நட்சத்திரமானஆக.,17ல் ஆடித்தேரோட்டமும் நடைபெறும். மறுநாள் 11ம் திருநாளாக, காலையில் தீர்த்தவாரி நடைபெற்று உற்சவம் நிறைவு பெறும்.