ஸ்ரீவி.,ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா: ஆக.,8ல் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2015 12:08
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத்தேரோட்ட விழா வரும் 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று காலை 6 மணிக்குமேல் 7 மணிக்குள் துவஜாரோகணம் நடக்கிறது. ஐந்தாம் நாளான 12 இரவு 10 மணிக்கு ஐந்து கருடசேவை நடக்கிறது. 7ம் நாளான 14 இரவு 8 மணிக்கு மேல் கிருஷ்ணன்கோயிலில் சயன திருக்கோலம் நடக்கிறது. 9ம் நாளான 16 காலை 8.05 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் ராமராஜா தலைமையில் கோயில் அலுவலர்கள் செய்து வருகின்றனர். இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் செருக்கூர் மண்டபத்தில் நேற்று 2ம் கட்ட ஆலோசனை கூட்டம் கலெக்டர் ராஜாராமன் தலைமையில் நடந்தது.எஸ்.பி.மகேஷ்வரன், டி.ஆர்.ஓ., முத்துகுமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.