திண்டிவனம்:திண்டிவனம் அடுத்த வி.பாஞ்சாலம் கிராமத்தில் ஏழு கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.விழாவையொட்டி நேற்று காலை 8.45 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து 9 மணிக்கு மேல் கற்பக விநாயகர், ரேணுகா பரமேஸ்வரி, சீனுவாச பெருமாள், கதம்பவன ஈஸ்வரர், கருமாரியம்மன், முத்தாலம்மன், நவக்கிரக கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.நடராஜன், சிவகுருநாதன் தலைமையிலான குழுவினர் கோவில் கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி பூஜைகளை நடத்தி வைத்தனர்.