புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே பாலமுருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் ஆடிமாத கிருத்திகையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் மற்றும் தேரில் வீதியுலா நேற்று முன்தினம் நடந்தது. அதனையொட்டி அன்று இரவு 7:00 மணிக்கு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு திருத்தேரில் வைத்து கோவிலைச் சுற்றி வலம் வந்தது. பின்னர் பாலமுருகன், விநாயகர், அம்மன் சுவாமிகள் ஊஞ்சலில் வைத்து அலங்கரித்து தாலாட்டு பாடும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.