கிள்ளையில் பாலக்கிருஷ்ணன் சுவாமி கோவில் கட்டும் பணி: இளைஞர்கள் ஆர்வம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஆக 2015 01:08
கிள்ளை: சிதம்பரம் அருகே கிள்ளை ஸ்ரீசரவணா நகரில் ஸ்ரீபாலக்கிருஷ்ணசுவாமிக்கு புதிய ஆலயம் கட்டும் பணி துவங்கியுள்ளது. பக்தர்கள் நன் கொடை அனுப்பி வைக்க நிர்வாகத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். கடலுõர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில், தில்லை காளிக்கோவிலில் இருந்து 15 கி., தொலை வில் கிழக்கே வங்கடலோரம், பிச்சாவரம் சுற்றுலாமையம் செல்லும் சாலையில் கிள்ளை கடைவீதியில் மிகவும் பழமை வாய்ந்த ஸஞ்சீவிராயர் கோவிலில் அருள் பாலித்து வரும் ஸ்ரீபாலக்கிருஷ்ணசுவாமிக்கு தனி கோவில் கட்ட அப்பகுதி இளைஞர்கள் முன் வந்தனர். அதன் பின் அப்பகுதி மக்களிடம் வரி வசூல் செய்து புதிதாக கோவில் கட்ட திட்டமிட்டு கடந்த இர ண் டு மாத்திற்கு முன் பூமி பூஜை துவக்கினர். கோவில் கட்டுமான பணிகள் துவங்கியது. தற்போது பூமி மட்டத்தில் இருந்து சுமார் 15 அடி உயரத்திற்கு கோவில் கட்ட மதிற்சுவர் எழுதிப்பு காங்கிரிட் தளம் அமைத்து ஓட்டியுள்ளனர். தொடர்ந்து சுற்றுமதிற்சுவர், இதர சன்னதிகள் அமைக்கும் பணியில் ஈடு பட்டு வருகின்றனர். 20 வயதுடைய யாதவ திருமணமாகாத இளைஞர்களின் கோவில் கட்டும் பணிக்கு பக்தர்கள் மற்றும் கோவி லுக்கு கொடையளிக்கும் செல்வந்தவர்கள் கட்டுமான பணிகளுக்கு நிதி மற்றும் பொருட்கள் உதவி செய்திடவும் இது தொடர்பாக 9994285541 மற்றும் 99447-46702 என்ற கைபேசியில் தொடர்பு கொ ள்ளுமாறு தெரிவித்துள்ளனர்.