மெட்டீரியல் ரோப்கார் டவர் பழநியில் பணிகள் மும்முரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2015 02:08
பழநி: பழநி மலைக்கோயில் மெட்டீரியல் ரோப்கார் மேல்தளத்தில் புதிய ‘டவர்’ அமைக்கப்பட்டு, கீழ்தளத்திலும் புதிய அஸ்திவாரம் அமைத்து ‘டவரை’ பொருத்தும்பணி நடக்கிறது. பழநி மலைக்கோயிலுக்கு பஞ்சாமிர்த டப்பாக்களை ஏற்றிச் செல்ல ரூ.ஒரு கோடி செலவில் ‘மெட்டீரியல் ரோப்கார்’ அமைக்கப்பட்டது. இதில் 6 நிமிடத்தில் 250 கிலோ வரை கொண்டுசெல்ல முடியும். கீழ்த்தளத்தில் இருந்து ஒருபெட்டியில் பஞ்சாமிர்த ட ப்பாக்களும், அதேபோல மேலே இருந்து வரும் பெட்டியில் காலிடப்பாக்களும் கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் கடந்த மார்ச் 25ல் ÷ மல்புறத்திலுள்ள ‘டவர்’ சேதமடைந்து கீழே விழுந்து கம்பிவடக்கயிறு அந்தரத்தில் தொங்கியது பெட்டி மலையில் உருண்டு விழுந்து விபத்து நடந் தது. அதைத்தொடர்ந்து ரோப்கார் வல்லுனர்குழுவினர் ஆய்வு செய்து மழை மற்றும் பலத்த காற்றில் சேதமடையாத வகையில் மேல்தளத்திற்கு புதிய டவர் மற்றும் கீழ்தளத்தில் உள்ள டவருக்கு புதிய அஸ்திவாரம் அமைக்க பரிந்துரைசெய்தனர். அதன்படி தற்போது மேல்தளத்தில் புதிய பெட் அமைக்கப்பட்டு ‘டவர்’ அமைக்கப்பட்டுள்ளது. கீழ்தளத்தில் டவருக்கான ‘பெட்’ புதிதாக அமைக்கும்பணிநடக்கிறது. அதன்பின் டவருடன் கம்பி வடக்கயிறுகள் இணைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்படும். இம்மாதத்தில் மெட்டீரியல் ரோப்கார் பயன் பாட்டிற்கு வரஉள்ளது. கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,“மீண்டும் விபத்து ஏற்படாத வகையில் வல்லுனர்குழு பரிந்துரையின்படி மெட்டீரியல் ரோப்காரை புதுப்பி க்கும் பணி வேகமாக நடக்கிறது. விரைவில் இயக்கப்படும்,”என்றார்.