பதிவு செய்த நாள்
11
ஆக
2015
02:08
காஞ்சிபுரம்: வடக்குபட்டு மாரியம்மன் கோவில் ஆடி திருவிழாவில், கூழ் வார்த்தலும், தீமிதி நிகழ்ச்சியும் நடைபெற்றது. குன்றத்துார் ஒன்றிய த்திற்கு உட்பட்ட, வடக்குபட்டு கிராமத்தில் உள்ள மந்தவெளி அம்மன் கோவில் ஆடி திருவிழா, கடந்த, 30ம் தேதி, காப்பு கட்டி துவங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று முன்தினம், அம்மனுக்கு, காலையில் பொங்கல் வைத்து, அப்பகுதிவாசிகள் வழிபட்டனர். இதை தொடர்ந்து அம்மனுக்கு கூழ் வார்த்தல் நடைபெற்றது. அன்று மாலை, 6:30 மணியளவில், தீமிதி திருவிழா நடைபெற்றது. பின், அம்மன் வீதியுலா நடந்தது.