கிள்ளை: சிதம்பரம் அருகே கொத்தங்குடி 20 அம்ச நகர் புத்து மாரியம்மன் கோவிலில் நடந்த தீ மிதி விழாவில் ஏராளமா@னார் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்து வந்தது. நேற்று முன்தினம் மாலை அப்பகுதி ஆற்றில் இருந்து கரகம், காவடி, காளி ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது. இரவு 7:00 மணிக்கு நடந்த தீ மிதி உற்சவத்தில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர். அண்ணாமலை நகர் பேரூராட்சி சேர்மன் கீதா கலியமூர்த்தி, கொத்தங்குடி ஊராட்சித் தலைவர் கண்ணன் வேணுகோபால் அன்னதானம் வழங்கினார். ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.