பழநி : பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை நேற்று மாலை துவங்கியது. பழநி ஊர் கோயில் என அழைக்கப்படும் பெரியநாயகியம்மன் கோயிலில் விநாயகர், கைலாசநாதர் அனுமதியுடன் பெரியநாயகியம்மன் சன்னதியில் சங்கல்பத்திற்கு பின் ஆடிலட்சார்ச்சனை துவங்கியது. தினந்தோறும் 4 ஆயிரம் மந்திரங்கள் ஓதப்பட்டு ஆகஸ்ட் 11-ல் லட்சார்ச்சனை பூர்த்தி அடைய உள்ளது. அன்று ஆடி லட்சார்ச்சனை வேள்வி நடைபெறும். ஆகஸ்ட் 12-ல் அம்மனுக்கு மகா அபிஷேகமும், இரவு 8.30 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.