திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் அடுத்த கொழுந்திராம்பட்டு ஏரியில், மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.கொழுந்திராம்பட்டு புனித அந்தோனியார் ஆலயம் சார்பில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. பொதுமக்கள் பலரும் ஏரியில் கூடிநின்று, பங்குதந்தை ஆரோக்கியதாஸ் தலைமையில் மழைவேண்டி கூட்டு பிராரர்த்தனை செய்தனர்.பொதுவில் சேகரிக்கப்பட்ட அரிசியை கொண்டு உணவு சமைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.