செஞ்சி : தேவதானம்பேட்டை திருவாளீஸ்வரி அம்மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு வளையல் அலங்காரம் செய்தனர்.செஞ்சி ஒன்றியம் தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் உள்ள திருவாளீஸ்வரிக்கு நேற்று ஆடிப்பூர உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு திருவாளீஸ்வரர், திருவாளீஸ்வரிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்தனர். மகா தீபாராதனையும், பிரசாத விநியோகமும் நடந்தது. பூஜைகளை அருட்பெரும் ஜோதி குருக்கள் செய்தார்.