பதிவு செய்த நாள்
19
ஆக
2015
11:08
தேவகோட்டை: தேவகோட்டையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம், தாசா சாகித்யா திட்டம்,தேவகோட்டை சின்ன மைனர் பாலன் பவுண்÷ டஷன் இணைந்து திருப்பதி பெருமாள் உற்சவம் நடத்தினர். திருமலை திருப்பதியிலிருந்து ஸ்ரீனி வாசபெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் தேவகோட்டை எழுந்தருளினார். நகர் வலத்தை தொடர்ந்து ஊஞ்சல் சேவா நிகழ்ச்சி, சங்கீதசேவை, புஷ்ப அலங்கார சேவை, வேதபாராயணம், மங்கல பாராயணம். சுவஸ்தி வச்சனம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். திருமலை தேவஸ்தான தாசா திட்ட சிறப்பு அதிகாரி அனந்ததீர்த்தசார், தமிழக தலைமை ஒருங்கிணைப்பாளர் சாந்தி சர்வோதமன், பாலன் பவுண்டேஷன் தலைவர் ராமநாதன், ராமேஸ்வரம் கோயில் அறங்காவலர் சோமநாராயணன், சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன், கல்லுõரி தலைவர் லட்சுமணன் செட்டியார் பங்கேற்றனர்.