ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் காமாட்சியம்மனுக்கு சிறப்பு அலங்காரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19ஆக 2015 11:08
செஞ்சி: செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் காமாட்சியம்மன்னுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்தனர். செஞ்சி காமாட்சியம்மன் உடனுரை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது. இதை முன்னிட்டு காமாட்சியம்மனுக்கு மாலை 6:00 மணிக்கு சிறப்பு அபி ஷேகம் செய்து, வளையல் அலங்காரம் செய்தனர். இரவு 8 :00 மணிக்கு மகா தீபாராதனையும், சுமங்கலி பெண்களுக்கு சிறப்பு தாம்பூலமும் வழ ங்கினர். பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடந்தது. பூஜைகளை கிரிசங்கர் குருக்கள் செய்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.