மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை டவுன் திருவாரூர் சாலையில் உள்ள வீரமாகாளியம்மன் கோயில் சிதிலமடைந்ததை அடுத்து பக்தர்கள் முயற்சியில் கோயில் முழுவதும் திருப் பணி வேலைகள் செய்யப்பட் டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு கடந்த 19ம் தேதி பூர்வாங்க பூஜைகள் நடைபெற்று யாகசாலை பூஜை தொடங்கியது. இன்று(ஆக.21) காலை 6 மணிக்கு நான்காம் காலயாகசாலை பூஜை தொடங்கி 9மணியளவில் பூர்ணாஹூதியாகி யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்து 9.40 மணியளவில் விமான மகாகும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர் வீரமாகாளியம்மனுக்கு மகாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலை பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகத்தை வெங்கடேச குருக்கள், கோயில் அர்ச்சகர் ஐயப்பன் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர். இதில் நிர்வாக குழு, திருப்பணி குழுவினர் மற்றும் நகராட்சி தலைவர் பவானி உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.