திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் மந்தக்கரை வீதி மதுரை வீரன் கோவில், ஆண்டுபெருவிழாவை முன்னிட்டு சுவாமி வீதியுலா நடந்தது.திருக்கோவிலூர் மந்தக்கரை வீதியில் உள்ள மதுரைவீரன் கோவிலில், ஆண்டுத் பெருவிழா கடந்த 14ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு கள்வரை கருவறுத்து, வெள்ளையம்மாளை சிறையெடுக்கும் வைபவம் நடந்தது.நேற்று காலை 7:00 மணிக்கு மதுரைவீரன் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:30 மணிக்கு மதுரைவீரன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. இதனைத் தொடர்ந்து கும்பபாளையம் கொட்டு நிகழ்ச்சி நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.