பண்ருட்டி: பண்ருட்டி ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் நேற்று ஆடிப்பூரத்தையொட்டி பாலாபிஷேகம் நடந்தது. பண்ருட்டி ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் 6ம் ஆண்டு ஆடிப்பூர முப்பெரும் விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் மாலை வேள்வி துவ ங்கியது. நேற்று 23ம் தேதி காலை 5:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. காலை 9:00 மணிக்கு சோமநாதசுவாமி கோவிலில் இ ருந்து பக்தர்கள் கஞ்சி கலயத்தை ஊர்வலமாக எடுத்து வந்தனர். ஊர்வலத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் வள்ளி துவக்கி வைத்தனர். 11:00 மணிக்கு கருவறை அம்மனுக்கு சிறப்பு பால் அபிேஷகம் நடந்தது. இதில் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் சண்முகம், தாசில்தார் கீதா, சக்தி பீட தலைவர் முத்துகிருஷ்ணன், செயலாளர் முத்துகுமரப்பன், துணை தலைவர் ராஜசேகர், இணை செயலர் கணபதி, மகளிரணி இணை செயலர் சீதாலட்சுமி, சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இணை செயலர் சுப்ரமணியன் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தினார்.