பதிவு செய்த நாள்
24
ஆக
2015
10:08
காஞ்சிபுரம்: தும்பவனம் மாரிஅம்மன் ஆடி திருவிழாவில், நேற்று, அம்மன் ஊர்வலமும் கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடைபெற்றது. சின்ன காஞ்சிபுரம், நாகலுாத்து தெருவில், சிவகாமி சமேத நடராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள தும்பவனம் மாரியம்மனுக்கு, ஆடி திருவிழா, கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. முதல் நாள், அம்மனுக்கு வரிசை புறப்பட்டு, சாந்தலீஸ்வரர் கோவில் சென்றடைந்தது. இரண்டாம் நாள், அம்மன், மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். நேற்று மூன்றாம் நாள், தும்பவனம் மாரியம்மன் மீனவர்குல பெண் அலங்காரத்தில் விதிஉலா நடைபெற்றது. மதியம், 1:00 மணிஅளவில், கோவிலில் அம்மனுக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை, 3:00 மணியளவில், ஊரணி பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், நடைபெற்றது.