பதிவு செய்த நாள்
27
ஆக
2015
12:08
திருமழிசை: திருமழிசையில் உள்ள, பிரசன்ன விநாயகர் கோவிலில், இன்று, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. திருமழிசையில், குளிர்ந்த நாயகி உடனுறை ஒத்தாண்டேஸ்வரர் கோவில் உள்ளது. 64 சுயம்புலிங்க சிவாலயங்களில் ஒன்றான, ஒத்தாண்டேஸ்வரர் கோவிலின், தென் கோபுரத்தடியில், பிரசன்ன விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், மகா கும்பாபிஷேகம், இன்று, காலை 7:30 மணி முதல், 9:00 மணிக்குள் நடைபெறுகிறது. முன்னதாக, நேற்றுமுன்தினம், காலை 7:30 மணிக்கு, மகா சங்கல்பமும், தீப பூஜையும் நடந்தது. தொடர்ந்து, மகா கணபதி ÷ ஹாமமும், பாலாலய பிரசன்ன பூஜையும் நடந்தது. பின், மாலை 4:30 மணிக்கு, வாஸ்து சாந்தி ஹோமமும், இரவு 7:30 மணிக்கு, மகா கும்ப பூ ஜையும், இரவு 8:00 மணிக்கு, முதற்கால பூர்ணாஹூதியும் நடந்தது. பின், நேற்று, காலை 9:00 மணிக்கு, மகா கும்ப விசேஷ பூஜையும், பகல் 12:00 மணிக்கு, இரண்டாம் கால பூர்ணாஹூதியும், இரவு 9:00 மணிக்கு, மூன்றாம் கால பூர்ணாஹூதியும் நடந்தது. இன்று, காலை 6:30 மணிக்கு, கும்ப பூஜையும், அக்னி கார்யமும் நடைபெறும். அதன்பின், 8:30 மணிக்கு கடம் புறப்பாடும், காலை 8:45 மணிக்கு, விமான கும்பாபிஷேகமும், 9:00 மணிக்கு, விநாயகர் மூலவர் மகா கும்பாபிஷேகமும் நடைபெறும். அதன்பின், இரவு 7:30 மணிக்கு, உற்சவர் பிரசன்ன விநாய கருக்கு தீபாராதனையும், அதை தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் வீதியுலாவும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை, திருமழிசை செங்குந்தர் மகாஜன சபை யினர் செய்துள்ளனர்.