முருகப்பெருமானே யாகம் வளர்ப்பது போன்ற திருவுருவம் சென்னிமலை முருகன் கோயிலில் உள்ளது. இந்த திருவுருவத்திற்கு இரண்டு முகம், எட்டு கைகள் இருக்கும். முன்புறம் உள்ள கைகளில் வஜ்ரம் (படை), குக்குடம் (கோழி), கேடயம், நெய்க்கிண்ணம் இருக்கும். பின்பக்கம் உள்ள கைகளில் சுருவம் (கரண்டி), அட்சமாலை, கட்கம் (வாள்), ஸ்வஸ்திகம் இருக்கும். இவரது நிறம் வெள்ளை, கழுத்து மட்டும் கருத்திருக்கும் என ஸ்ரீதத்துவநதி கூறுகிறது. முருகப்பெருமான் தன் கையில் வைத்திருக்கும் நெய்க்கிண்ணத்திலிருந்து கரண்டியால் நெய் எடுத்து யாகம் செய்வதாக ஐதீகம். கருவறையின் தெற்குப்பக்கத்தில் வெளிப்புறம் உள்ள மாடத்தில் ஒரு முருகன் உருவம் உள்ளது. இவரை ஜாதவேத முருகன் என்பார்கள். இவரை வழிபட்டால் யாகங்கள் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.