பதிவு செய்த நாள்
27
ஆக
2015
05:08
1. ஸ்ரீ க்ருஷ்ண த்வத் பத உபாஸநம்
அபயதமம் பத்த மித்யா அர்த்த த்ருஷ்டே
மர்த்யஸ்ய ஆர்த்தஸ்ய மந்யே வ்யபஸரதி
பயம் யேந ஸர்வ ஆத்மநா ஏவ
யத்தாவத் த்வத் ப்ரணீதாந் இஹ பஜந
விதீந் ஆஸ்தித: மோஹ மார்க்கே
தாவந் அபி ஆவ்ருத அக்ஷ: ஸ்கலதி ந
குஹசித் தேவ தேவ அகில ஆத்மந்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! தேவர்களின் தேவனே! அனைத்து உயிர்களின் ஆத்மாவாக உள்ளவனே! உலகில் உள்ள பெய்யானவற்றின் மேல் மிகுதியாக அக்கறை செலுத்தி ஆசை வைத்து, அதன் காரணமாகவே மரணம் என்னும் பயத்தை அடையும் எந்த ஒரு மனிதனுக்கும் உனது பாதங்கள் கதியாகும். அவை பயத்தை நீக்க வல்லது என்று நான் நினைக்கிறேன். நீ உபதேசித்த பக்தி மார்க்கத்தை நிச்சயம் பின்பற்ற வேண்டும். அப்படி யார் ஒருவன் பின்பற்றுகிறானோ, அவன் தவறான பாதையில் சென்றாலும் தடுக்கி விழுவதில்லை அல்லவா?
2. பூமந் காயேந வாச முஹு அபி மநஸா
த்வத் பல ப்ரேரித ஆத்மா
யத் யத் குர்வே ஸமஸ்தம் தத் இஹ
பரதரே த்வயி அஸௌ அர்ப்பயாமி
ஜாத்யா அபி இஹ ச்வ பாக: த்வயி நிஹித
மந: கர்ம வாக் இந்த்ரிய அர்த்த
ப்ராண: விச்வம் புநீதே ந து விமுக மநா:
த்வத் பதாத் விப்ர அவர்ய:
பொருள்: எங்கும் உள்ளவனே! குருவாயூரப்பா! உனது சக்தியால் எனது மனம் செயல்படுத்தப்படுகிறது. இப்படிப்பட்ட நான் எனது உடல், வாக்கு, மனம் ஆகியவற்றால் செய்யும் அனைத்துச் செயல்களையுமே உன்னிடம் அர்ப்பணம் செய்கிறேன். ஒருவன் பிறப்பால் மிகவும் தாழ்ந்த சண்டாளனாக இருந்தாலும் உன்னிடம் தன் மனம் வாக்கு, புலன்கள், ப்ராணன் முதலியவற்றை அர்ப்பணம் செய்தால் அவன் (தன்னை மட்டும் அல்லாது) உலகத்தையே பரிசுத்தம் செய்கிறான். ஆனால் உனது திருவடிகளின்மீது பக்தி இல்லாதவன் உயர்ந்த ப்ராமண குலத்தில் பிறந்தாலும், உலகத்தையே சுத்தமாக்க முடியாது அல்லவா?
3. பீதி: நாம த்விதீயாத் பவதி நநு
மந: கல்பிதம் ச த்விதீயம்
தேந ஐக்ய அப்யாஸ சீல: ஹ்ருதயம்
இஹ யதாசக்தி புத்யா நிருந்த்யாத்
மாயா வித்தே து தஸ்மிந் புந: அபி ந
ததா பாதி மாயா அதிநாதம்
தத் த்வாம் பக்த்யா மஹத்யா ஸததம்
அநுபஜந் ஈச பீதிம் விஜஹ்யாம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மக்களுக்குப் பயம் என்பதே வேறு ஒரு பொருளால் (தன்னைவிட வேறுபட்ட இரண்டாவது ஒரு பொருள்.) மட்டுமே உண்டாகிறது அல்லவா! அப்படி பயம் விளைவிக்கும் அந்தப் பொருள் மனதில் உண்டாகும் கற்பனையால் ஏற்பட்டதே ஆகும். (பயம் என்பது காரியப் பொருள், இரண்டாவது பொருள் என்பது காரணப் பொருள்). நான் எனது மனதை ஒருநிலைப்படுத்தி காரியப்பொருளும் காரணப்பொருளும் ஒன்றே என்பதை அறிந்து கொள்வேன். ஆனால் அந்த மனம் மாயையினால் மீண்டும் சூழப்படும்போது தெளிவு நிலை மறைந்து ப்ரகாசம் குறைந்துவிடும். எனவே மாயையின் தேவனாக உள்ள உனது பக்தியின் மூலமாக எனது பயத்தை நான் வேரோடு அழிப்பேன்.
4. பக்தே: உத்பத்தி வ்ருத்தீ தவ சரண
ஜுஷாம் ஸங்கமேந ஏவ பும்ஸாம்
ஆஸாத்யே புண்ய பாஜாம் ச்ரிய:
இவ ஜகதி ஸ்ரீமதாம் ஸங்கமேந
தத் ஸங்க: தேவ பூயாந் மம கலு
ஸததம் தத் முகாத் உந்மிஷத்பி
த்வத் மஹாத்ம்ய ப்ரகாரை: பவதி
ச ஸுத்ருடா பக்தி: உத்தூத பாபா
பொருள்: குருவாயூரப்பா! உலகில் உள்ளவர்களுக்குச் செல்வம் படைத்தவர்களின் நட்பு மூலமாக மேலும் செல்வம் வளர்கிறது. இதே போன்று உனது திருவடிகளைச் சரணம் என்று அடைந்தவர்களுக்கு மிகுதியான பக்தி பெருகுகின்றது. க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அப்படிப்பட்ட அடியார்களின் தொடர்பு எனக்கு எப்போதும் உண்டாக்க வேண்டும். அவர்கள் தங்கள் நாக்கின் மூலமாக எப்போதும் உனது பெருமைகளைப் பற்றியே பேசுகின்றனர். இதன் மூலமாக அனைத்துப் பாவங்களையும் நீங்க வல்ல பக்தி உண்டாகும் அன்றோ!
5. ச்ரேய: மார்க்கேஷு பக்தௌ அதிக
பஹுமதி: ஜந்ம கர்மாணி பூய:
காயந் க்ஷேமாணி நாமாநி அபிதத்
உபயத: ப்ரத்ருதம் ப்ரத்ருத ஆத்மா
உத்யத் ஹாஸ: கதாசித் குஹசித்
அபி ருதந் க்வ அபி கர்ஜந் ப்ரகாயந்
உந்மாதீ இவ ப்ரந்ருத்யந் அபிகுரு
கருணாம் லோக பாஹ்யம் சரேயம்
பொருள்: குருவாயூரப்பா! மோட்சத்தை அளிக்கக் கூடிய வழிகளில் பக்தி மார்க்கத்தில் எனக்கு விருப்பம் அதிகமாக இருக்க வேண்டும். நன்மைகளை அள்ளி வழங்கக்கூடிய உனது அவதாரங்களையும், லீலைகளையும், திருநாமங்களையும் எப்போதும் நான் கூறிக்கொண்டு இருக்க வேண்டும். அதன் விளைவாக நான் எனது மனம் உருகி சிரித்தபடியும், உனது பெயர்களை உரக்கக் கூறியபடியும், பித்துப் பிடித்தவன் போல் ஆடிக்கொண்டும், உன்னை நினைத்து அழுது கொண்டும் இருப்பேன். இப்படியாக பற்று இல்லாமல் நான் இருக்க நீயே அருள் புரிய வேண்டும்.
6. பூதாநி ஏதாநி பூத ஆத்மகம் அபி
ஸகலம் பக்ஷி மத்ஸ்யாந் ம்ருக ஆதீந்
மர்த்யாந் மித்ராணி சத்ரூந் அபி யமித
மதி: த்வந்மயாநி ஆநமாநி
த்வத் ஸேவாயாம் ஹி ஸித்யேந் மம
தவ க்ருபயா பக்தி தார்ட்யம் விராக:
த்வத் தத்வஸ்ய அவபோத: அபி ச
புவந பதே யத்ந பேதம் விநா ஏவ
பொருள்: உலகத்தின் நாதனே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! பஞ்ச பூதங்களையும் (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்) அவை மூலம் உண்டான உலகங்களையும், பறவை இனங்களையும், மீன் இனங்களையும், விலங்கினங்களையும், மனிதர்களையும், நண்பர்களையும், விரோதிகளையும் உனது உருவம் என்றே தீர்மானித்து அவை அனைத்தையும் நான் வணங்கும்படி செய்ய வேண்டும். உனக்குப் புரியும் தொண்டு மூலமாக உனது அருள் கிடைக்கப் பெறுகிறது. அந்த அருளால் மிகச் சிறந்த பக்தியும், பற்றில்லாத குணமும், உன்னைக் குறித்த ஞானமும் உண்டாகிறது. இல்லையா?
7. நோ முஹ்யந் க்ஷுத் த்ருட் ஆத்யை: பவ
ஸரணி பவை: த்வத் நிலீந ஆசயத்வாத்
சிந்தா ஸாதத்ய சாலீ நிமிஷ லவம்
அபி த்வத் பதாத் அப்ரகம்ப:
இஷ்ட அநிஷ்டேஷு துஷ்டி வ்யஸந
விரஹித: மாயிகத்வ அவபோதாத்
ஜ்யோத் ஸ்நாபி: த்வந் நக இந்தோ:
அதிக சிசிரிதேந ஆத்மநா ஸஞ்சரேயம்
பொருள்: குருவாயூரப்பா! எனது மனதை உன்னிடம் ஒன்றச் செய்து விட்டேன். உலக வாழ்க்கையின்போது உண்டாகும் பசி, தாகம் போன்றவற்றால் நான் மயங்காதவனாகவும், எப்போதும் உன்னைக் குறித்து த்யானம் செய்பவனாகவும், உனது திருவடிகளில் இருந்து சிறிதும் விலகாமல் உள்ளவனாகவும், நான் இருக்க வேண்டும். மேலும், எனக்கு விருப்பமான பொருளால் உண்டாகும் மகிழ்வும், விருப்பம் இல்லாத பொருளால் உண்டாகும் துன்பமும் மாயையால் நிகழ்கின்றன. என்பதை உணர்ந்தவனாக மகிழ்வும் துன்பமும் அற்றவனாக இருக்க வேண்டும். உனது திருவடிகளில் சந்திரன் போன்று (குளிர்ச்சியாகவும் அழகாகவும்) உள்ள நகங்கள் வீசும் ஒளியின் மூலமாக நான் குளிர்ந்த மனதுடன் உலவ வேண்டும்.
8. பூதேஷு ஏஷு த்வத் ஐக்ய ஸ்ம்ருதி
ஸமதிகதௌ ந அதிகார: அதுநா சேத்
த்வத் ப்ரேம த்வத்க மைத்ரீ ஜட மதீஷு
க்ருபா த்விட்ஸு பூயாத் உபேஷா
அர்ச்சாயாம் வா ஸமர்ச்ச: குதுகம் உரு
தர ச்ரத்தயா வர்த்ததாம் மே
த்வத் ஸம்ஸேவீ ததா அபித்ருதம்
உபலபதே பக்த லோக உத்தம த்வம்
பொருள்: குருவாயூரப்பா! இந்த உலகில் வாழும் அனைத்தும் உயிர்களிலும் நீ அந்தர்யாமியாக உள்ளாய் என்று அறியும் ஞானத்தைப் பெற எனக்குத் தகுதி இப்போது இல்லை என்றால் - உன்னிடம் பக்தியும் உனது அடியர்களிடம் மிகுந்த அன்பும், ஞானம் இல்லாதவர்களிடம் கருணையும், விரோதிகளைப் புறக்கணிக்கும் திறனும் ஏற்பட வேண்டும். அதற்கும் தகுதி இல்லை என்றால் உனது திருவுருவத்தை வழிபடும் ஆசையும், மிகுந்த பற்றும் உண்டாக வேண்டும். இப்படியாக உன்னை வழிபடக் கூடியவன் பக்தர்களில் மிகவும் சிறந்தவனாக உள்ளான் இல்லையா?
9. ஆவ்ருத்ய த்வத் ஸ்வரூபம் க்ஷிதி ஜல
மருத் ஆதி ஆத்மநா விக்ஷிபந்தீ
ஜீவாந் பூயிஷ்ட கர்ம ஆவலி விவச
கதீந் து: க்க ஜாவே க்ஷிபந்தீ
த்வத் மாயா மா அபிபூந் மாம் அயி புவந
பதே கல்பதே தத் ப்ரசாந்த்யை
த்வத் பாதே பக்தி: ஏவ இதி அவதத்
அயி விபோ ஸித்த யோகீ ப்ரபுத்த:
பொருள்: குருவாயூரப்பா! உன்னால் ஏற்படுத்தப்பட்ட மாயை உனது உண்மையான உருவத்தை மறைத்து நிலம், நீர், காற்று, போன்று பலவாகக் காட்டுகிறது; கர்மவினை காரணமாக அடையப்பட்டதும் கட்டுப்படுத்த முடியாததும் ஆகிய உடலைப் பெற்ற ஜீவாத்மாவை துன்பம் என்றும் கொடியவலையில் சிக்க வைக்கிறது. இப்படிப்பட்ட மாயை என்னை ஆளாமல் இருக்க வேண்டும். ப்ரபுத்தர் என்ற சித்தர். உனது திருவடிகளில் கொள்ளும் பக்தி ஒன்றே அந்த மாயையை அழிக்க வல்லது என்று கூறினார் அல்லவா?
10. து காநி: ஆலோக்ய ஜந்துஷு அலம்
உதித விவேக: அஹம் ஆசார்ய வர்யாத்
லப்த்வா த்வத்ரூப தத்வம் குண சரித கதா
ஆதி உத்பவந் பக்தி பூமா
மாயாம் ஏநாம் தரித்வா பரம ஸுகமயே
த்வத் பதே மோதிதாஹே
தஸ்ய அயம் பூர்வ ரங்க: பவந புர பதே
நாசய அசேஷ ரோகாந்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஜீவர்களிடம் உண்டாகும் துன்பங்களைக் கண்டு எனக்கு ஞானம் ஏற்பட வேண்டும். அதனால் ஒரு சிறந்த குருவை நான் அடைந்து, அவர் மூலமாக உனது உண்மையான ஸ்வரூப ஞானம் அடைவேன். உனது திருக்கல்யாண குணங்களைக் குறித்து எப்போதும் பாடிக்கொண்டு, அதன் காரணமாக எனது பக்தி பெருகி நிற்கும். மாயை என்பதை வென்று பரமானந்தம் அளிக்கும் உனது திருவடிகளைப் பற்றி பெரு மகிழ்வு கொள்ள வேண்டும். மாயையை வெல்ல இதுவே சரியான தொடக்கம் ஆகும். எனது நோய்களை நீக்க வேண்டும்.