திருப்பதியில் கைசிக துவாதசி ஆஸ்தானம்: கருவறையில் இருந்து வெளியே வந்த சீனிவாசமூா்த்தி !
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03நவ 2025 11:11
திருப்பதி; திருமலையில் கைசிகதுவாதசியை முன்னிட்டு ஏழுமலையான் கருவறையில் இருக்கும் உக்கிர சீனிவாசமூா்த்தி கோயிலுக்குள் வலம் வந்து அருள்பாலித்தார்.
திருமலையில் கைசிகதுவாதசியை முன்னிட்டு, நேற்று அதிகாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஸ்ரீ உக்ரசீனிவாசமூர்த்தி கோயிலில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அபூர்வமாக கருவறையில் இருக்கும் உக்கிர சீனிவாசமூா்த்தி இன்று மட்டுமே வெளியே வருவார். உக்ரசீனிவாசமூர்த்தி, ஸ்ரீதேவி பூதேவியுடன் கைசிக துவாதசி நாளில் மட்டும் சூரிய உதயத்திற்கு முன் வீதிகளில் வீதியுலா வருகிறார். சூரிய உதயத்துக்கு முன்பு அவா் கொடிமரம் பிரதட்சணம் செய்தபடி எழுந்தருளினாா். அவரை தங்க வாசல் முன்பு எழுந்தருள செய்து அா்ச்சகா்கள் ஆஸ்தானம் நடத்தினா். இந்நிகழ்ச்சியில் திருமலை ஸ்ரீ ஸ்ரீ சின்னஜிய சுவாமிகள், துணை அலுவலர் லோகநாதம் மற்றும் பிற அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.