பண்ருட்டி: பண்ருட்டி தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவில் திருத்தேர் உற்சவம் நடந்தது. பண்ருட்டி தட்டாஞ்சாவடி துர்கா பரமேஸ்வரி காளியம்மன் கோவிலில் கடந்த 20ம்தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. 26ம் தேதி பால்குடம் ஊர்வலம், சாகைவார்த்தல் உற்சவம் நடந்தது. 27ம் தேதி காலை 7:00 மணிக்கு சக்திகரகம் ஊர்வலம், 12:00 மணிக்கு செடல் உற்சவம், மாலை 4:00 மணிக்கு திருத்தேர் உற்சவம் நடந்தது. திருத்தேரில் துர்காபரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.